செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தனித்தமிழ் ஈழம்...

அலைகடல் அரணில் 
திசைகளை வகுத்து
வாணிபம் செய்தேன்.
சிங்களன் அழும்குரல்
கேட்டு ஆறுதல்சொல்ல
அவனிடம் ஓடினேன்!

குயிலும் குருவியும்,
நாயும் நரியும்
நன்றாய் வாழுது இங்கே!!!
முதலில் தோன்றிய,
தலைமகன் உறவுகள்
விட்டுபோனது எங்கே??

அம்மையும் அப்பனும்,
மனைவியும் மக்களும்,
மண்ணில் புதைந்தனர்.
இதை நித்தமும் பார்த்த
கடவுளும், அரசனும்
மௌனமாய் இருந்தனர் :(

மதி இழ மாட்டோம்,
இனி விழ மாட்டோம்,
எனும் எதிர்குரல் கேட்டு,
புத்துயிர் பெறுவோம்,
புதுவிதி செய்வோம்,
இனி நம்மில், 
நம் மண்ணில்!!!