செவ்வாய், 5 அக்டோபர், 2010

தமக்கை!!!

'அ' னாவை அன்னைக்கு விட்டு,
'ஆ' வன்னா முதல்
'ஃ' ன்னா வரை
கரம்பிடித்து கற்பித்தாய்!

சிறுவிரல் பிடித்து,
குறுமணல் மிதிக்க,
தத்தி தவழ்ந்தவனை,
தலைநிமிர நடக்கவைத்தாய்!!

இருள் தெரியாதவாறு,
இமைகளை இறுகக்கட்டி,
அதிகம் அலையவிடாமல் அகப்பட்டு,
கண்ணாமூச்சி ஆடினாய்!!!

மூவாறு வருடமாய் தெரிந்த,
முதல் தோழியை,
மாமன் மணமுடிக்கையில்
கண்ணில் நீர்கசிய தெரிந்தது,

முதன்முதலாய்
தம்பிக்கு தமக்கையல்ல,
அன்னையென்று,
ஆனந்தமாய்!!!

எப்படி சொல்வேன்...?

இளையோர் முதியோரென
இனம் பாராமல் இளைப்பாரவிட்டு,
வழிமாறி வானுலா வந்த
பறவைகளின் பசி தீர்த்து,

மண் வளமுற மனமார,
மாறியை பொழியச்செய்து,
இயற்கையின் இன்னலில் பொருளிழந்து,
அறைகூவளிட்டோரை அரவனைத்ததை,

ஓரறிவுள்ள நான் எப்படி சொல்வேன்,
வெறும் சாலையோர மரமென்று எனை,
வேறு வேறாய் வேரறுக்கும்,
ஆறறிவுள்ள மானிடர்களிடம்...?