செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதி!!!

நாளைமீது நம்பிக்கை 
வைத்த நாயகன். 
நம் நாளை எண்ணி, 
நாளும் கழித்த பேரறிவாளன்...
சமுதாய சீர்கேடுகளை,
அறம் பாடி அழித்தவன்...
நல்லவர் வீழ்ந்தாலும்,
அவர் எண்ணங்கள்
வீழ்வதில்லை,
மண்ணோடு மறைந்துவிட்டான்,
இம்மண்ணில் பிறப்பவர்,
இனி புதுவிதி செய்ய!!!
"பார் அதிர" பாட்டிசைத்தான்...
பிற்காலத்தில் பல
"பாரதிகள்" உருவெடுக்க...
இனி நாம் உருவெடுப்போம்,
"கலியுக பாரதிகளாய்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக