சூரியன் உதித்து 10 நாழிகை ஆனது. ஆயினும், அவன் பொற்கரங்கள் இன்னும் வெளிப்படாமல் பனித் திரையை போர்த்தி படுத்து இருந்தது. அதிகாலை பூர்த்த மலர்கள், பனியின், ஈரத்தை தன் இதழ்களில், ஏந்தி காத்திருந்தது, ஆதவனின் தாகம் தணிக்க. இன்னும் சூரியன் வெளிப்படவில்லை. மானிடர் கண்மணிகள், சில அடிதூரம் கூட காணும் சக்தியை இழந்திருந்தது. காலையில் கொக்கரித்த சேவலுக்கு சந்தேகம் எழுந்தது தன் குரலின் மீது. ஏனெனில் அது ஒன்றும், மார்கழி அல்ல. வாடை காற்று, இளமான்களை வாட்டி எடுக்கும், ஆடி மாதம். ஆதவனின் வருகையை நோக்கி, பனித் திரையை கிழித்தெறிய முடியாது, அயர்ந்து காத்திருந்தது, அனைவரின் கண்களும்.
சூரியன் மட்டும் சிலிர்க்காமலில்லை. இங்கே ஆதிரையும் தான். மேகத்தின் மீது மயில் ஒன்று படுத்திருந்தது. வான்வெளியில் அல்ல. இங்கே பூவுலகில். ஆதிரை, அவள் பெயர். மெய் சிலிர்க்காது படுத்திருப்பவளை, சிணுங்கி பார்க்க, பனிக் கூட்டம், அவள் கன்னத்தை வருடியது, கால மாற்றத்தை நிகழ்த்தத்தான். இவள் முகம் கானது ஆதவன் சிலிர்க்க மாட்டேன் என்றுரைத்ததன் காரணம் இவையாவும். வாடி இருக்கும் சூரியனை நாடி சென்று அறிந்தது மேககூட்டம்.
அன்று முதல், ஆதிரை மலரும் நேரம் வரை, ஆதவனும், மலராதிருந்தான். இவை அறியாது, பூமி வெப்பமடைந்தது, கடல் மேலெழுந்தது, வான் கீழ்சென்றது, என பற்பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர், விஞ்ஞானிகள்.
அன்று முதல், ஆதிரை மலரும் நேரம் வரை, ஆதவனும், மலராதிருந்தான். இவை அறியாது, பூமி வெப்பமடைந்தது, கடல் மேலெழுந்தது, வான் கீழ்சென்றது, என பற்பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர், விஞ்ஞானிகள்.
தென்றல் காற்றின், கெஞ்சலில் ஒருவழியாக, ஜீவராசிகள் மீது இறக்கம் கொண்டு, முகம் மலர்ந்தாள் ஆதிரை. பளிச்சென்று, மின்னிய முகத்தின், ஒளிப்பட்டு, ஆதவன் கண்களும், பிரமிப்பில், சில கணங்கள், அயராது விழித்தது. படர்ந்திருந்த பனி கூட்டம் இந்நிகழ்வை கண்டு மெய் சிலிர்த்து, கரைந்து மறைந்தே போனது.
புத்தம் புது காலை. ஆம் இன்று நிஜமாகவே ஆதிரைக்கு புதியதோர் அனுபவத்தை தரக்கூடிய நாள். அவளை பெண்பார்க்க வருகிறார்கள். முதன் முதலாய் தன் வாழ்கை துணையை நேரில் காணப்போவதை எண்ணி சற்று பூரித்து முகம் மலர்ந்திருந்தாள், இன்னும் படுக்கையின் மீதே.
புத்தம் புது காலை. ஆம் இன்று நிஜமாகவே ஆதிரைக்கு புதியதோர் அனுபவத்தை தரக்கூடிய நாள். அவளை பெண்பார்க்க வருகிறார்கள். முதன் முதலாய் தன் வாழ்கை துணையை நேரில் காணப்போவதை எண்ணி சற்று பூரித்து முகம் மலர்ந்திருந்தாள், இன்னும் படுக்கையின் மீதே.
ஆதிரையின் அம்மா, சற்று கோவத்துடன், வந்து, "சீக்கிரம் ரெடி ஆவு, இன்னும் ஒரு மணி நேரத்துல அவங்க எல்லாம் வந்துடுவாங்க. உங்க அப்பா, என்ன கத்திட்டு இருக்காரு."
"இன்னும் ஒன் hour இருக்குல, அப்புறம் என்ன? நீ அமைதியா இரு. அப்பிடியே அவங்க வந்துட்டாலும், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும், sunday தானே" என்றாள் ஆதிரை.
"மாப்ள வீட்ல வராங்கலேன்னு, கொஞ்சமாவது வெக்கம், பயம் இருக்காடி...? ஒரே பொண்ணுன்னு, செல்லம் கொடுத்து வளத்தது, தப்பா போச்சு. பையன் பாவம் டி... கொஞ்சம் அவன் மேல இறக்கம் காட்டு..." என்றார், ஆதிரையின் தாய்.
"நான் என்ன உன்னமாதிரிய இருக்கேன். என்ன பாத்தா, பையன் உடனே flat ஆயிடுவான். அப்புறம் எங்க, நீ கொடுக்குற, பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் உள்ள எறங்க போகுது?" என்றால் ஆதிரை.
"சரி, நீதான் அழகு, பொய் ரெடி ஆவு.".... என்று சொல்லிவிட்டு, சமையலறை நோக்கி சென்றார்.
ஆதிரை, குளித்து, முடித்து, பட்டுடுத்தி, மழையில் தலை நனைத்த மயில் போல், சிலிர்த்து, அவள் தாயை கட்டி ஒரு முத்தமிட்டு, "கோச்சிகாத மா... தொ, ரெடி ஆயிட்டேன் பாரு..."
"போய் தலைய நல்ல துவட்டு, டைம் இல்ல..." என்றார், சற்று எரிச்சல் கலந்த அன்புடன்.
மறுபடியும், அவள் தாயின், காதை கடித்து, தலையை சிலுப்பி, தண்ணீர் தெளித்து, உள்ளே ஓடிவிட்டாள், ஆதிரை.
தாய் கமலாவும், சந்தோஷத்தில், கண்ணில் நீர் ததும்ப, அறுசுவை உணவை சமைத்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டு வாசலில், ஸ்கார்பியோ வின், அலறல் சத்தம், சற்று சந்தோஷமாய், கேட்டது. மாப்பிளை வீட்டாரை, அழைக்க சென்ற, ஆதிரையின், தந்தை அவர்களுடன், திரும்பிவிட்டார்.
மாப்பிள்ளை வீட்டார், அனைவரும், வந்து, அமர்ந்தனர். அது சற்றே பெரிய கூடம். அதனால், பக்கத்துக்கு வீட்டு, சுட்டி பிள்ளைகள், ஓடி ஆட, இன்னும், சற்று இடம் இருந்தது. மாப்பிளை பெயர், கார்த்திக்... கார்த்திக் ரகுநாதன்.
கார்த்திக், பேங்க் மேனேஜர் ஆக பணிபுரிகிறார். சொந்தமாக, வீடு, நிலம், வாசல், தோட்டம் துரவு என்று, வசதிக்கும், வருமானத்திற்கும், குறையில்லா, ஆனந்தமான, குடும்பம். கார்த்திக்கின், தங்கை, உள்ளே சென்று, வாங்கி வந்த பூவை, ஆதிரைக்கு கொடுத்தாள். ஆதிரை, அவளை, பார்த்ததில்லை. அதனால், சற்று தயங்கி வாங்கி கொண்டு, நன்றி என்றாள்.
மாப்பிள்ளை வீட்டார், அனைவரும், வந்து, அமர்ந்தனர். அது சற்றே பெரிய கூடம். அதனால், பக்கத்துக்கு வீட்டு, சுட்டி பிள்ளைகள், ஓடி ஆட, இன்னும், சற்று இடம் இருந்தது. மாப்பிளை பெயர், கார்த்திக்... கார்த்திக் ரகுநாதன்.
கார்த்திக், பேங்க் மேனேஜர் ஆக பணிபுரிகிறார். சொந்தமாக, வீடு, நிலம், வாசல், தோட்டம் துரவு என்று, வசதிக்கும், வருமானத்திற்கும், குறையில்லா, ஆனந்தமான, குடும்பம். கார்த்திக்கின், தங்கை, உள்ளே சென்று, வாங்கி வந்த பூவை, ஆதிரைக்கு கொடுத்தாள். ஆதிரை, அவளை, பார்த்ததில்லை. அதனால், சற்று தயங்கி வாங்கி கொண்டு, நன்றி என்றாள்.
வெளியே வந்த, கார்த்திக்கின் தங்கை, அவள் அண்ணனிடம், "dai கார்த்திக், இதவிட பெட்டெர் அஹ பொண்ணு கெடைக்காதுடா, சோ, ஓகே சொல்லிடு, என்னால, இன்னொரு வாட்டி, உன்கூட பொண்ணு பாக்க எல்லாம் வர முடியாது." என்று யாரும் கேளதவாறு, அவன் காதில், லேசாய் முனுமுனுத்தாள்.
"பொண்ணு உனுக்கு புடிச்சா? எனுக்கு புடிக்க வேணா? பாக்கலாம்..." என்றான், சற்று இறுமாப்புடன்.
அனைவருக்கும், காபி, பஜ்ஜி, சொஜ்ஜி, உபசரிப்பு நடந்தது. அப்போது, கார்த்திக்கின், தாத்தா, "எல்லாம் நல்ல இருந்துது, பொண்ண கூட்டிட்டு வாங்க, பையன் காத்துட்டு இருக்கான்..."
பெரியவரின், பேச்சு, ஆதிரையின், காதில் விழுந்தது. முழுவதுமாய் அலங்கரித்த பதுமை ஒன்று, புதுமையாய் காட்சி அளித்தது, ஆதிரையின், தாய்க்கு. ஆதிரையின், சித்தி, அவளை அழைத்து வர உள்ளே சென்றார்.
மிடுக்கான பேச்சும், துடுக்கான செயலும், சட்டென்று காணாமல் போனால், என்ன செய்வது? தன் உடனிருந்த ஒரு அங்கம் காணாமல் போய்விட்ட தவிப்பு. செய்வதறியாது வெட்கி கன்னம் சிவந்து நின்றாள் உள்ளே, ஆதிரை...
"அட அட அட, என் கண்ணே பட்டுடும் போல, அவ்ளோ அழகா இருக்க..." என்றார், அவள் சித்தி.
"போ சித்தி, என்னால வர முடியாது, எனுக்கு ஒரு மாதிரியா இருக்கு..." என்றாள் சற்று குரல் தழுதழுத்து...
சில நிமிடம் ஆகியும், வெளியே பெண் வராததால், கார்த்திக்கின், கண்கள், நொடிக்கு ஒரு முறை, அந்த அறையின் கதவுகளை நோட்ட மிட்டு கொண்டிருந்தது.
தவிப்பில், அவன் தன் கைகளை, தேய்த்து கொண்டு இருந்தான். கவனத்தை திசை திருப்ப முயற்சித்தும் , முடியாது, தலையை கோதி, முன்னும் பின்னும் பார்த்து கொண்டு இருந்தான்.
தவிப்பில், அவன் தன் கைகளை, தேய்த்து கொண்டு இருந்தான். கவனத்தை திசை திருப்ப முயற்சித்தும் , முடியாது, தலையை கோதி, முன்னும் பின்னும் பார்த்து கொண்டு இருந்தான்.
அப்போது, "கார்த்திக், இந்தா kerchief, தொடச்சிக்கோ... பொண்ணு இப்பிடியே உன்ன பாத்தா, சத்யமா, நோ சொல்லிடும்... உன் கூட பொறந்த பாவத்துக்கு, உனுக்கு பொண்ணு பாக்க, நான் வேற கூடவே வரணும்..." என்றாள் நகைத்து கொண்டே, அவன் தங்கை, விஷாலி...
"வாய மூடிட்டு, சும்மா இருடி... எனுக்கு ஒரு சான்ஸ் கெடைக்காமையா போய்டும், அப்பா பாத்துக்குறேன் உன்ன..." என்றான், கார்த்திக், தன தங்கையிடம்.
அப்போது, கார்த்திக்கின், அம்மா, "விஷாலி, நீயும் பொய் கூட்டிட்டு வா... பொண்ணுக்கு கொஞ்சம் தயக்கம் குறையும்..."
விஷாலி, எழுந்து ஆதிரை இருந்த அறைக்கு சென்றாள். சென்று, அவளிடம், "நான் கார்த்திக் தங்கை, விஷாலி..."
ஆதிரை "oh... ஹாய்... நான், ஆதிரை..." என்றாள்.
"தெரியும், உங்க பேர் கூட தெரியாமையா, பொண்ணு பாக்க வந்து இருப்போம்...? கூச்ச படாதீங்க... வெளிய கார்த்திக், உங்களைவிட, அதிகமா வெக்க பட்டு உக்காந்து இருக்கான்... சோ நீங்க casual அஹ வரலாம்..."
விஷாலியின், பேச்சு, ஆதிரைக்கு, சற்று, உத்வேகத்தை தந்தது...
"ஓகே... நான் ரெடி... போலாம் சித்தி..." என்றாள் ஆதிரை...
உடனே, விஷாலி, வெளியே வந்து தன அண்ணனின், அருகில் சென்று அமர்ந்தாள்...
"Dai கார்த்திக், ஒரு வழியா பொண்ணு வர ஓகே சொல்லிடுச்சிடா, நீ லக்கி போ... இப்பவே நல்ல பாத்துக்கோ... பத்து நிமிஷத்துல, பொண்ணு உள்ள போய்டும்..." என்றாள் விஷாலி சிறிது நையாண்டியுடன்...
அப்போது, அறைக்கதவு, மெல்ல திறந்தது. வெண்ணிற பாதம் ஒன்று, பொன்னிற வர்ணம் பூசி, மெல்ல ஒரு அடியெடுத்து வைத்தது. தினம் தினம், அவள் சுற்றி திரிந்த அதே வீடு, அன்று புதிதாய் தெரிந்தது, அவள் கால்களுக்கு. மிடுக்காய் துல்லிய கைகளும், கால்களும், பிணை ஏதுமின்றி, வெட்கத்தில், நிதானத்தின், உச்சத்தை தொட்டது. இன்னொரு அடி எடுத்து வைக்க, அவள் மனம் நினைத்தும், அவள் கால்கள், வெளியே செல்ல மறுத்தது. ஒரு பாதம், ஒரு கைவிரல் மட்டும் காட்சிக்கு, புலப்பட்ட, அவன் கண்களுக்கு, அவள் முகத்தினை, மறைத்தது, அக்கதவு.
முகம் மறைத்த, அறை கதவினை, உடைத்தெறிய தோன்றியது மாப்பிளைக்கு. பாவம்... என்ன செய்வான். அந்த சிறுவிரல் அப்படி, அந்த கால்கள், அப்படி... மருதாணி இன்றி, ரசிக்க கூடிய கால்களில், இதுவும் ஒன்று.
ஆதிரையின், நாணலை அறிந்த, அவள் சித்தி "ச்சி போடி, ரொம்ப தான் வெக்கபடுற..." என்று சொல்லி லேசாய் தள்ளினாள்.
இதுவரை Andriod கிளியாய், வாழ்ந்த அவளுக்குள், ஒளிந்திருந்த ஆலமர கிளி அன்று எட்டிப்பார்த்தது.
இதுவரை Andriod கிளியாய், வாழ்ந்த அவளுக்குள், ஒளிந்திருந்த ஆலமர கிளி அன்று எட்டிப்பார்த்தது.
மெல்ல, அடிமேல் அடியெடுத்து வைத்து, கூடத்தின், நடுவே வந்து, சபையோருக்கு, நமஸ்காரம் செய்து, தரைக்கு, வலிக்காதவாறு மெல்ல அமர்ந்தாள், ஆதிரை.
அப்போது அவள் வளர்த்துவரும், கூண்டு கிளி, அவளை கண்டு, சந்தோஷத்தில், "ஆதிரை.... ஆதிரை... ஆதிரை..." என்று கீச்சிட்டது. நிசப்தம் நிறைந்திருந்த அவ்வறையில், கிளியின், ஓசை, அனைவரையும், சற்று சகஜ நிலைக்கு திருப்பியது.
கிளியின், அழைப்பிற்கு, தலை அசைத்து, திரும்பி பார்த்தாள் ஆதிரை... அப்போது அவளை முழுவதுமாய் பார்த்தான், கார்த்திக்.
என்னென்று சொல்வது...
என்னென்று சொல்வது...
"காலையில், அவளிட்ட மாக்கோலம், அவள் கைகள் மேல் காதல் கொண்டு, ஏறி, அமர்ந்திருந்தது, மருதானியாய். ஐவிரல் அழகியை இதுவரை நான் கண்டதில்லை. அவள் கைகளுக்கு, மருதாநியோ தேவை இல்லை."
இதுமட்டுமா...?
"அவள் தலை திருப்பியதும், அவள் காதணியில், தொங்கும், மணிகள் அசைந்து, அவள் பேச்சுக்கு, மெல்லிய சங்கீதம் இசைத்தது.
அவ்விசைக்கு, இரு தலை முடிகள், கீழிறங்கி, அவள் நெற்றியில், மெல்ல நடனமாடியது..."
"ராகம், தாளம், பல்லவி, இவை மூன்றும், ராஜாவின், பாட்டில், மட்டுமே உண்டென்று சொல்லுவோர், இவளை கண்டதில்லை போலும்..."
இதுமட்டுமா...?
"அவள் தலை திருப்பியதும், அவள் காதணியில், தொங்கும், மணிகள் அசைந்து, அவள் பேச்சுக்கு, மெல்லிய சங்கீதம் இசைத்தது.
அவ்விசைக்கு, இரு தலை முடிகள், கீழிறங்கி, அவள் நெற்றியில், மெல்ல நடனமாடியது..."
"ராகம், தாளம், பல்லவி, இவை மூன்றும், ராஜாவின், பாட்டில், மட்டுமே உண்டென்று சொல்லுவோர், இவளை கண்டதில்லை போலும்..."
கார்த்திக், செய்வதறியாது, திகைத்து, பார்த்து கொண்டிருந்தான். எப்படியாவது, அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேச எண்ணினான். சபையோர் முன் பேச தயங்கி அமர்ந்து கொண்டிருந்தான். ஆதிரை, சற்று ஒரு முறை நிமிர்ந்து, அவனை பார்த்தாள். இரு நொடிகள் தான், இருக்கும், அதற்குள், அவன் முழு உருவத்தையும், தன கண்களில், காட்சி பதிவு செய்தாள். எவ்வாறு பேசுவது என்று, அவளும், தயங்கி அமர்ந்திருந்தாள்.
மாப்பிளை, பெண்ணையும், தவிர, மற்ற அனைவரும், சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இவர் இருவரால் மட்டும், சகஜ நிலைக்கு, திரும்ப இயலவில்லை. காரணம், வெட்கம் அவளுக்கு, வியப்பு அவனுக்கு.
விஷாலி, இருவரையும், மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள். இருவரும் பேசுவதை தெரியவில்லை. "இம்... எல்லாம் கால கொடுமை" என்று, முனு முனுத்தாள்.
10 நிமிடம் கடந்து விட்டது. இன்னும், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் உள்ளே சென்று விடுவாள் என்ற தவிப்பு, அவனுள் மிகுதியாய் இருந்தது.
அப்போது, "சரி மா.. நீ உள்ள போ..." என்றார், ஆதிரையின் சித்தி. ஆதிரை மெல்ல எழுந்தாள்.
சட்டேன்று, விஷாலி, கார்த்திக்கின், Andriod மொபைலில் உள்ள ஒரு applicationஇல் "ஆதிரை 3" என்று டைப் செய்து, அவனிடம் தந்து விட்டாள். உடனே, அவன் மொபைல் போன், "ஆதிரை... ஆதிரை... ஆதிரை..." என்று கீட்சிட்டது... தன வீட்டு கிளி தான் அழைத்தது, என்று எண்ணி, அவள் மறுமுறை, திரும்பி பார்த்தாள். அவள் மட்டும் அல்ல, அனைவரும், திரும்பி பார்த்தனர்.
ஆம், கிளியும், திரும்பி பார்த்தது. கிளி சற்று கோவத்துடன் "யாரா அவன், என்ன மாதிரி பேசுறது?" என்றது.
ஆம், கிளியும், திரும்பி பார்த்தது. கிளி சற்று கோவத்துடன் "யாரா அவன், என்ன மாதிரி பேசுறது?" என்றது.
கார்த்திக், தேள் கொட்டிய திருடன் போல், விழித்தான், செய்வதறியாது...
"Dai மானம் போகுதுடா... பேசனும்னா சொல்ல வேண்டியது தானே..." என்றார், கார்த்திக் இன் தாயார்.
உடனே "மாப்ள, பொண்ணுகூட பேச பிரிய படறார் போல... ஆகட்டும் ஆகட்டும்... நல்லா பேசட்டும், பேசட்டும்..." என்றார், ஓர் பெரியவர், சிரித்துக்கொண்டே.
ஆதிரை, இப்போது, கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினாள். கார்த்திக்கும், சற்று தயக்கம் தவிர்த்து, கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினான்.
இருவரும், ஆதிரை வீட்டு, மொட்டை மாடிக்கு சென்றனர். ஆதிரை, கார்த்திக்கின், தயக்கத்தை போக்க, மெல்ல பேச ஆரமித்தாள்.
"கார்த்திக், இங்க நல்ல காத்து வரும்... எங்க வீட்ட சுத்தி மரம் இருக்கு... என்ன உங்க friend அஹ நெனச்சி பேசுங்க..." என்றாள், ஆதிரை...
"சரி... நீங்க என்ன பண்றீங்க?" என்றான் கார்த்திக்...
"இதெல்லாம் தெரியாமையா, பொண்ணு பாக்க வந்தீங்க?" என்று ஒரு பல்பு கொடுத்தாள் ஆதிரை...
"தெரியும்... ஆனா நீங்க சொல்லும்போது, உங்க Ear ring, சிணுங்கும்... அந்த சத்தத்துக்கு, உங்களோட ரெண்டு தலைமுடி, டான்ஸ் ஆடும்... அதெல்லாம் மறுபடியும் பாக்கலாம் நு நெனச்சி கேட்டேன்..." என்று தன எண்ணத்தினையும் சேர்த்து வெளிப்படுத்தினான், கார்த்திக்.
இதை கேட்ட அவளுக்கு, மறுபடியும், வெட்கம் வந்து, ஒட்டி கொண்டது... அவள் புன்னகை மறைக்க நினைத்தும், எட்டிப் பார்த்தது, லேசாய். இருவரும், ஒருவரை ஒருவர், பார்த்து புன்னகைத்தனர்.
என்ன பத்தி உங்க கிட்ட ஏதேதோ சொல்லி இருப்பாங்க... இருந்தாலும், நானே சொல்றேன்... "நான் கார்த்திக்... பேங்க் மேனேஜர் அஹ இருக்கேன். வருஷத்துல 40 days லீவ்... நல்லா ஊற சுத்துற type... I don't smoke, I don't drink... மத்தபடி சொல்ற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல. எனுக்கு உங்கள புடிச்சி இருக்கு... உங்களுக்கு ஓகே வா...?" என்றான் கார்த்திக்.
"பரவா இல்லையே, இவ்ளோ casual அஹ பேசுறீங்க... First time பொண்ணு பாக்குற, அந்த nervousness இல்ல உங்ககிட்ட..." என்றாள் ஆதிரை.
"நோ நோ... நாட் 1st டைம்... நான் ஏற்கனவே ரெண்டு பொண்ணு பாத்தேன்... அவங்கள புடிக்கல... சோ எனுக்கு இது ஒன்னும் புதுசு இல்ல... கொஞ்சம் பழகி போச்சு..." என்றான் கார்த்திக்.
ஆதிரைக்கு, சற்று கோபம் துளிர்த்தது... இரண்டு பேரை வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு, வேண்டாம் என்று சொன்னவனை, அவள் தண்டிக்க நினைத்தாள்.
"நீங்க உங்க விருப்பத்த சொல்லிடீங்க... ஆனா எனுக்கு அவ்ளோவா interest இல்ல.. Sorry" என்றாள்...
கடுப்பான, கார்த்திக்... "முன்னாடியே சொல்லி இருந்தா, நான் பாக்க வந்து இருக்க மாட்டேனே..." என்று சொல்லிவிட்டு, நகர்ந்தான்...
"நீங்க மட்டும், ரெண்டு பேரை பாத்துட்டு, வேணாம் நு சொல்லலாம், நான் வேணாம் நு சொல்ல கூடாதா?" என்றாள், தைரியமாக.
கார்த்திக்கின் தவறு அப்போது புரிந்தது அவனுக்கு.
"தப்புதாங்க, அவங்க கிட்ட sorry சொல்லணும்... Thanks for the lesson; bye..." என்று சொல்லிவிட்டு, கீழே இறங்கி வந்து விட்டான்.
உடன் ஆதிரையும், கீழே, இறங்கி வந்தாள், மிடுக்கோடு. மாப்பிள்ளை வீட்டார், அனைவரும், விடைபெற்று சென்றனர்.
விசாலி, ஆதிரையிடம்..."என் அண்ணனுக்கு, உங்கள ரொம்ப புடிச்சி இருக்கு... உங்களுக்கு ஓகே நா சொல்லுங்க, நான் அண்ணன் கிட்ட சொல்லிடறேன்" என்றாள்.
"நான் ஏற்கனவே, உங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டேன்..." என்றாள், ஆதிரை.
விஷாலி, சந்தோஷத்தில், "Thanks அண்ணி, என்று சொல்லி, கட்டிபிடித்து, விடை பெற்று சென்றாள்..."
அனைவரும், சந்தோஷத்தில், இருக்க, கார்த்திக்கின், மனம், மட்டும், செய்த தவறை எண்ணி, சற்று தவிப்பில், இருந்தது... வீட்டிற்கு, சென்றவுடம், அந்த இரு வரண்களின், மொபைல் நம்பர்களை, தன் அப்பாவின், டைரியில் தேடி எடுத்தான்.
எடுத்து, தான் நிராகரித்த இரு பெண்களிடம், மன்னிப்பு கேட்டான்... அவர்களும், கார்த்திக்கின், மன்னிப்பை ஏற்று, நல்ல நண்பர்களாயினர்.
இரண்டு வாரம் கழித்து, கார்த்திக்கின், அப்பா, அவனிடம், "பொண்ணு வீட்ல எப்போ கல்யாணம் பிக்ஸ் பண்ணலாம்னு நு கேக்குறாங்க, எப்ப date fix பண்ணலாம்? " என்றார்.
புரியாத, சந்தோசத்தில், திகைத்து நின்றான். கார்த்திக். "இப்பவே வெச்சிக்கலாம் பா... எனுக்கு ஓகே..." என்றான்....
அவசரத்த பாரு... பொண்ணுக்கு இன்னும், six months காலேஜ் இருக்கு... அப்பறமா தான்... என்றார்.
உடனே, கார்த்திக், தன் வண்டியை எடுத்து கொண்டு, ஆதிரையின், கல்லூரிக்கு விரைந்தான். கல்லூரி முழுக்க தேடி, ஒருவாறு, அவளை கண்டு பிடித்தான்.
ஆதிரை, தன தோழியுடன், நடந்து சென்று கொண்டிருந்தாள்.
கார்த்திக் தன மொபைல் போனை எடுத்து, application இல், ஆதிரை, என்று type செய்தான்.
மொபைல் loudspeaker இல் "ஆதிரை.... ஆதிரை... ஆதிரை..." என்று அலறியது...
அவள் திரும்பி பார்த்தாள்... வியப்பில், செய்வதறியாது திகைத்தாள்....
"இப்ப கூப்பிட்டது, நான் தான்... ரொம்ப Thanks... இத சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்..." ஆதிரை, வெட்கத்துடன், தன தோழியர், நையாண்டியை பொறுத்து கொண்டே கனவுகளை சுமந்து நடந்து சென்றாள்....
சடங்குகள் ஆயிரம், இருப்பினும், அவற்றை முறையாய் செய்வோமே... வேண்டாம் என்று சொல்வதற்கு எதற்காக, பெண் பார்க்க செல்ல வேண்டும். அறியாமல் தவறிழைக்கும், கார்திக்குகள் எண்ணற்றோர் உள்ளனர்... கூடுமான வரையில், அடுத்தவர் சங்கடங்களை தவிர்ப்பதே நன்று... ஆதிரையை போல்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக