வெள்ளி, 20 அக்டோபர், 2017

தீபாவளி...

ஆயிரம் பேர் வெடித்து,
வீசிய குப்பையை,
நான்கு பேர் அள்ளும்,
அவலம்...
தீபாவளி 
அள்ள அள்ள 
தீராவலி...

செவ்வாய், 17 அக்டோபர், 2017

பட்டாசு... (குழந்தை பாடல்)

வெடிக்குது பார், வெடிக்குது பார்,
பட பட பட்டாசு வெடிக்காது பார்...
பொறிக்குது பார், பொறிக்குது பார்,
மத்தாப்பு கம்பி பொறிக்குது பார்..
தூவுது பார், தூவுது பார்,
பூத்தொட்டி வெளிச்சம் தூவுது பார்..
சுத்துது பார், சுத்துது பார்,
சங்கு சக்கரம் சுத்துது பார்...
பறக்குது பார், பறக்குது பார்,
ராக்கெட் மேலே பறக்குது பார்...
அளவாய் பட்டாசு வெடிப்போமே...
அன்புடன் சிரித்து மகிழ்வோமே...
வெடித்ததும் மரக்கன்று நடுவோமே...
காற்றின் மாசை குறைப்போமே...

திங்கள், 16 அக்டோபர், 2017

இல்லச் சமத்துவம்...

உண்ணும் உணவு  பொதுவென்பார்,
சமையலறை எச்சங்கள் உனதென்பார்...
உடுத்தும் துணிமணி  பொதுவென்பார்,
உடுப்பை துவைத்தல் உனதென்பார்...
வீட்டின் சுத்தம் பொதுவென்பார்,
கூட்டலும் துடைத்தலும் உனதென்பார்...
பெற்ற பிள்ளை பொதுவென்பார்,
பேணிவளர்க்கும் கடன் உனதென்பார்...
பிள்ளை கடமை பொதுவென்பார்,
நோய்பிணி தொடுத்தால் உனதென்பார்...
இல்லத்தரசிகள் என்றுரைப்பார்...
இல்லத்தடிமைகள் எனநடப்பார்...
போதுமடி பெண்ணே 
தாலிக்கு தலைகுனிந்தது...
போதுமடி பெண்ணே,
தலைமுறைக்கும் தலைகுனிந்தது...
இதுவல்லவா இல்லச் சமத்துவம்...
இல்லை இல்லை 
இதுதான் இல்லா சமத்துவம்...
இங்கே இல்லாள் சமத்துவம்...

எழு...

வா... விழிதிற வா...
வா... விடியுது வா....
நம் கனவுகள் ஆயிரம் கலையட்டுமே...
வரும் இரவினில் மறுபடி தொடரட்டுமே...
வா... தொடர்கதை வா...
வா... தொடங்குது வா...
மேல்வானம் தாண்டி பறப்போமே...
தடைநூறாயிரம் உடைப்போமே...
அந்த இடிகளை கொண்டு முரசறைவோம்....
சிறு மின்னல் கொண்டு ஒளிகொடுப்போம்...
வா வா வா... தோழா,,,,
வெண்ணிலவின் சட்டை பிடிப்போம்...
ஒருநூறாயிரம் சாயம் அடிப்போம்...
சிறுகுடுவை கொண்டு நிலவை அடைப்போம்...
வா வா வா... தோழா....

சனி, 14 அக்டோபர், 2017

தெருவிளக்கு...


வீதிகளின்,
இருண்ட,
விதிகளை,
மாற்றி,
எழுதும்,
ஒளிப்பேழை...