திங்கள், 16 அக்டோபர், 2017

இல்லச் சமத்துவம்...

உண்ணும் உணவு  பொதுவென்பார்,
சமையலறை எச்சங்கள் உனதென்பார்...
உடுத்தும் துணிமணி  பொதுவென்பார்,
உடுப்பை துவைத்தல் உனதென்பார்...
வீட்டின் சுத்தம் பொதுவென்பார்,
கூட்டலும் துடைத்தலும் உனதென்பார்...
பெற்ற பிள்ளை பொதுவென்பார்,
பேணிவளர்க்கும் கடன் உனதென்பார்...
பிள்ளை கடமை பொதுவென்பார்,
நோய்பிணி தொடுத்தால் உனதென்பார்...
இல்லத்தரசிகள் என்றுரைப்பார்...
இல்லத்தடிமைகள் எனநடப்பார்...
போதுமடி பெண்ணே 
தாலிக்கு தலைகுனிந்தது...
போதுமடி பெண்ணே,
தலைமுறைக்கும் தலைகுனிந்தது...
இதுவல்லவா இல்லச் சமத்துவம்...
இல்லை இல்லை 
இதுதான் இல்லா சமத்துவம்...
இங்கே இல்லாள் சமத்துவம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக