செவ்வாய், 12 டிசம்பர், 2017

#RealIndiaThalaivarStyle

தோட்டத்துல வீடு கட்டி பாத்திருக்கேன், பாத்திருக்கேன்...
எரிக்குள்ள வீடுகள் கட்டிய பட்டணம் பட்டணமே...
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி ஆறுகள் காணாம போயிடுமே...
தோட்டத்துல வீடு கட்டி பாத்திருக்கேன், பாத்திருக்கேன்...

சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
ஊரசுத்தி பிளாட்  போட்டு வித்தான் பாரு...
சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
நாள்முழுக்க டெங்கு கொசு கடிக்கும் பாரு...
பச்சப்புள்ள தீக்குளிக்கும் கந்துவட்டி கொடுமைடா...
கார்டூனுல படம்வரைஞ்சா உள்ள தள்ளும் அரசுடா...
வேளச்சேரி மடிப்பாக்கம், நங்கநல்லூர் ஏறிடா...
குப்பைகொட்டி மேடாக்கி பிளாட்கட்டுன பாவிடா...
இன்னும் கதையை சொல்லட்டுமா???
குப்பைய கூடையில் அல்லட்டுமா???
சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு,
ஓட்டுக்கு காசுநீ வங்காதண்ணே...

சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
LKG க்கு லட்சம் ரூபா கேப்பான் பாரு...
சிங்காரமா ஊரு, இது சென்னை இன்னு பேரு...
தெர்மாக்கோலில் அணையமூடி வெப்பான் பாரு...
கட்டைவண்டி களத்துமேடு வங்கி வாசலில் நின்னுருச்சி...
கஷ்டப்படும் ஏழை நோட்டு செல்லா காசா ஆயிருச்சு...
சாக்கடைய அள்ளுறவன், வருஷமெல்லாம் கெட்டவண்டா..
தண்ணியில கைவெச்ச போலீஸ்காரன் நல்லவண்டா???
இன்னும் கதையை சொல்லட்டுமா???
குப்பை கூடையில் அல்லட்டுமா???
சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு,
ஓட்டுக்கு காசுநீ வங்கதாண்ணே...




#GaanaSong

துட்டு துபானி...
கெடச்சா அம்பானி...
இல்லனா பேமானி...
போடா சர்தானி...

துட்டு துபானி,
கெடச்சா அம்பானி,
இல்லனா பேமானி...
போடா சர்தானி...

பர்ச வெக்க பாக்கெட் இல்ல பங்கு பங்கு...
பத்துநாளா பாட்டிலுக்கு சங்கு சங்கு...
கிழிஞ்ச ஜோபியில 
நிக்காதுடா சில்லறை...
காசத்தேடி போக,
வாழ்க்கை முடியும் கல்லறை...

துட்டத்தேடி ஓடாதடா...
தூக்கம்கெட்டு சாகாதடா...
வாழ்க்கை போன வராதுடா... (துட்டு துபானி...)

கந்துவட்டி...

காரிருள் 
மேகம் சூழும்,
கழுத்தை 
பிடிக்க பார்க்கும்.
வெறுமை
மெல்ல புகைக்கும். 
வேற்றுமை 
புகைந்து வலுக்கும்,

நிழல்கூட 
நில்லாது விலகும்,
நிம்மதி 
அடியோடு இழக்கும்,
சில முகங்கள் 
முகத்திரை மாறும்,
சில  முகத்திரை 
முட்டிக்  கிழியும்,

நொடிகள் 
கடக்க யுகங்களாகும்,
நிமிர்நடை 
நொடிந்து போகும்.
இதழ்கள் 
திறக்க மறுக்கும்.
இமைகள் 
மிரண்டு திறக்கும்.

கால்கள்,
நில்லாது பறக்கும்,
கரங்கள்,
உதவாது விரிக்கும்.
கண்கள்,
காணாது சிவக்கும்.
செவிகள் 
கேளாது மடுக்கும்.

உறக்கம்,
தொலைந்தே போகும்,
உண்மை 
உறைந்தே சாகும்,
ஊர்மெச்ச,
வாழந்த உள்ளத்தில்,
உயிர்பயம்,
புற்றாய்  வந்துசேரும்.

செல்வம்,
காணாது போகும்,
மக்கள்,
தெருவோரம் சேரும்,
ஈட்டிய 
பெயரும் மண்ணாகும்,
எல்லாம்,
வட்டிக்கே ஈடாகும்...

கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...
கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...