திங்கள், 1 அக்டோபர், 2018

வாசகன்!!!

தாழிட்ட இமைகதவு
திறக்காதா???
தாய்மொழியை நாவள்ளி,
சுவைக்காதா???

தடம்புரண்ட கற்பனைகள்,
இணையாதா???
தரணியெல்லாம் புதுக்கவிதை,
பொழியாதா???

புத்துணர்வை மனமெல்லாம்,
உணராதா???
புத்துயிராய் பூமியெல்லாம்,
பிறக்காதா???

இன்றோடு இத்தேடல் 
முடிந்திடுமா???
இச்சென்மம் முடியும்வரை,
தொடர்ந்திடுமா???

தாய்மொழியை சுவாசிக்க,
தடைகளுண்டோ???
தடுத்திடுவார் தலையறுப்போம்,
விடைகளன்றோ...

வாசிக்க ஏனிந்த,
காத்திருப்பு???
வாசகராய் வாழ்ந்துவிடு,
தனிச்சிறப்பு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக