எரியும் விறகிலே,
எரிந்து போகுமே,
சிலையான மேனி!
உயிர் பிரிந்து போகையில்,
எழுந்து நிற்குமே,
இரையான தீனி!
மெய்இன்று தீயினில்,
பொய்யாகி போனதே!
உயிர்மட்டும் பிரிந்தின்று,
புகையாகி போனதே!
இதுதீயில் எரியும்
தேகம், இது தெரியும்
முன்புவரும் காலம்
மீது தாகம்!
இது கண்ணீரில் எரிகின்ற,
அணையாத வேள்வி!
உயிர் போனதெங்கே?, நாம்
கேட்கும் கேள்வி.
விடைகண்டு சொல்பவர்,
உயிருடன் உள்ளாரோ?
விடைகான செல்பவர்,
உயிரினை மாய்ப்பாரோ?
இது மரணம் தரும் பாடம்,
உயிர் மறைந்த பின்பும் பாரம்,
தீயில் எரிந்துபோன பின்பும்,
காற்றாய், தீயாய், ஒளியாய்,
வாழ்வோமே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக