உரிமைகள் விட்டு
போனது எங்கே?
உடைமைகள் விட்டு
போனது எங்கே?
அகதிகள் நாமும்
அதிதிகள் ஆவோம்,
தடுப்பவர் தலைகளை
தகர்த்திட துணிவோம்,
சுதந்திர தாகம்
சிந்தையில் ஏற்போம்,
தடைகளை உடைத்து
படைகளை சேர்ப்போம்,
அசுரனை அழிக்க
ஆயுதம் செய்வோம்,
புழுக்கள் நினைத்தால்
புலியாய் மாறும்,
புலிகள் நினைத்தால்
பூமியே மாறும்!!!
இரவுகள் இன்று
விடியலாய் மாறும்,
விடிந்திட மறுத்தால்
இடிகளாய் இடிப்போம்,
இடிகளாய் இடிப்போம்!!!