செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கொடை!!!


கண்களை தீண்டும்,
கனவுகள் கோடி...
நாவினில் பைந்தமிழ்,
வாக்கியம் கோடி...
கால்கள் கடந்திடும்,
காலங்கள் கோடி..
நெஞ்சினில் மிதந்திடும்,
நேசமும் கோடி...
உடல்  உருவம்தந்த,
அணுக்கள் கோடி,
மடல் எழுதச்சொன்னது,
உதிரம் தீண்டி,
மாண்டபின் உடற்கொடைக்காக...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புதுமழை...


ஊர்வலம் போகின்ற, 
மழைமேக கூட்டம்...
உன்வெட்கம் கண்டதும், 
உருமாறி தீண்டும்...
காண்கின்ற என்நெஞ்சம், 
கரைந்தேதான் போகும்...
புதுமழை இதுவென்று, 
பூலோகம் பூக்கும்...

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

கண்தானம்...

தினம் இயங்க மறுக்கும்,
இமைகள் ஆயிரம்...
தினம் இயங்க துடிக்கும்,
இமைகள் ஆயிரம்...
என் இருஇமை சேர,
இருளை கண்ட, 
விழிக்கு நானளிக்கும் பரிசு?
இறந்தபின் இடமாற்றம்...