வெள்ளி, 21 ஏப்ரல், 2017

நம்பிக்கை...

இரு கண்கள் நமக்கு,
கனவுகள் காண,
கண்ணீர் எதற்காக???
எதிர்காலம் நமக்கு,
காத்து கிடக்கு,
விதைப்போம் உழைப்பாக...

நாம் போகும்போது,
உடன்வரும் மேகம்,
தாகம் தீர்க்கத்தான்...
இனி கவலை துறந்து,
வானை அளப்போம்,
பருந்தை போலத்தான்...

தினம் விழுமே பல விதைகள்,
அதில் உயிர்க்கும் சில செடிகள்,
இந்த நம்பிக்கை ஒன்றேபோதும் 
வாழ்ந்திடத்தான்...

நாம் போகும் பாதை நீளம்,
ஆனால் தூரமில்லை...
போகத்துணிந்தால் வாழ்க்கை 
இங்கே பாரமில்லை...
உன் எண்ணம் அதை நீ மாற்று...
தினம் சுவாசி புதுவேட்கை காற்று...
இனி விண்மீன் போலே,
வாழ்வோம் அந்த வானின் மேலே...   
நம் வெளிச்சம் போதும் பூமி சிரிக்கும் 
இரவுக்குடையின் கீழே...   (இரு கண்கள்)

தத்தி தாவும் கால்கள் 
இருந்தால் ஓடிடுவோம்...
சிறு நத்தை ஆனால் நாளும்,
வழியில் ஊர்ந்திடுவோம்..
வழி தேடத்தானே கால்கள் நமக்கு...
வலிக்காமல் இங்கே வாழ்க்கை எவர்க்கு???
நம்பயணம் முடியும் முன்னே
புதுஉலகம்  காண்போமே...    
அதில் மற்றோர் கால்கள் பயணத்தானே,
பாதை அமைப்போமே...  (இரு கண்கள்)

வியாழன், 20 ஏப்ரல், 2017

முதுமை... புதுமை...

மெல்ல, எழுந்து வாடா...
இந்த உலகம் உனக்கு வீடா...
விதி மாத்த வாடா...

எல்ல தாண்டி வாடா...
முடி நரைச்ச காளைமாடா...
வேட்டி மடிச்சு வாடா...

அறுபது வயசுல,
புதுஆட்டம் போடு...
மூணு இருபதா நெனச்சினீ,
பாட்டம் பாடு...
இந்த பூமி தானே பழசு...
நம்ம மனசு என்றும் புதுசு...
விதி மாத்தி வாடா... 

கட்டையில போகும் காலம்,
கட்டைவண்டி ஓட்டலாம்...
கானக்குயில் பாட்டு கேட்டு,
காடுமேடு பாடலாம்...

ஆத்துமணல் அள்ளிவீசி,
நாலுப்பூர ஆடலாம்...
கம்மாயில தண்ணிவந்தா,
மூச்சி முட்ட ஓடலாம்...

(மெல்ல எழுந்து வாடா...)

கனா...

இமை திறந்து மூடும் முன்னே,
இதயத்தில் வந்தாயே...
இதழ் திறந்து பேசும் முன்னே,
எங்கோ பறந்தாயே...

உறங்கும் நேரம், 
கனவில் வந்து
கதைகள்நூறு சொன்னாயே...
உறக்கம் கலைந்து, 
உன்னை காண,
ஏனோ மறைந்தாயே...

சுவாசிக்கிறேன், 
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன், 
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...

இருபத்தைந்து, வருடம் தாண்டி,
அழகு புயலாய் வந்தாயே...
இரண்டு நொடியில், மனதில் வீசி,
இரவல் வாங்கி சென்றாயே...
காதல் கீற்று தந்த காயம் நீயடி...
ரணம் ஆற நின்று கொஞ்சி பேசடி...

நேசிக்கிறேன்,
எண்ணில் காதல் செய்த மாற்றம் நேசிக்கிறேன்...
யோசிக்கிறேன்,
எனக்கென்ன வாகுமென்று யோசிக்கிறேன்...

ஆசை நூறு, என் ஆயுள் நூறு,
அருகில் நீயும் வந்தாலே...
அழிந்திடாத கோலம் ஒன்றை,  
மனதில் ஒட்டி சென்றாயே..
எந்தன் நெஞ்சம் யாவும் வெள்ளை தாளடி..
அதில் காதல் வர்ணம் நீயும் தீட்டடி...

சுவாசிக்கிறேன், 
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன், 
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விடியல்...

பகல் இரவுகள் 
யாவும் தொடர்கதை...
அதில் விண்மீன் 
வெளிச்சம் விடுகதை...
இது விடியல் 
தேடிடும் மனதா???
உயர பறக்க 
தூண்டிடும் சிறகா???
இந்த வானம் பூமியும் 
புதிதாய் பிறக்குது வா வா...
இதில் எளியோர் வறியோர் 
வாழச்சொல்லுது வா வா...