இமை திறந்து மூடும் முன்னே,
இதயத்தில் வந்தாயே...
இதழ் திறந்து பேசும் முன்னே,
எங்கோ பறந்தாயே...
உறங்கும் நேரம்,
கனவில் வந்து
கதைகள்நூறு சொன்னாயே...
உறக்கம் கலைந்து,
உன்னை காண,
ஏனோ மறைந்தாயே...
சுவாசிக்கிறேன்,
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன்,
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...
இருபத்தைந்து, வருடம் தாண்டி,
அழகு புயலாய் வந்தாயே...
இரண்டு நொடியில், மனதில் வீசி,
இரவல் வாங்கி சென்றாயே...
காதல் கீற்று தந்த காயம் நீயடி...
ரணம் ஆற நின்று கொஞ்சி பேசடி...
நேசிக்கிறேன்,
எண்ணில் காதல் செய்த மாற்றம் நேசிக்கிறேன்...
யோசிக்கிறேன்,
எனக்கென்ன வாகுமென்று யோசிக்கிறேன்...
ஆசை நூறு, என் ஆயுள் நூறு,
அருகில் நீயும் வந்தாலே...
அழிந்திடாத கோலம் ஒன்றை,
மனதில் ஒட்டி சென்றாயே..
எந்தன் நெஞ்சம் யாவும் வெள்ளை தாளடி..
அதில் காதல் வர்ணம் நீயும் தீட்டடி...
சுவாசிக்கிறேன்,
உன்காற்றை நானும் மெல்ல சுவாசிக்கிறேன்...
வாசிக்கிறேன்,
என்பேரை எழுதி உன்னை வாசிக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக