வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

Android பெண்ணே !!!

Android பெண்ணே Apple கண்ணே
என்னை கொஞ்சம் பாரு...
Angry bird ஆய் நீயிருக்க 
reason சொல்லு யாரு???

உன் facelook கொஞ்சம் மாறனும்...
அது facebook வாலில் சேரனும்...
பல like  & comment  இல் 
server  எல்லாம் hang  ஆகணும்...

உன் dressing style மாறனும்...
புது trend  set  ஆகி போகணும்,
அதை உன்பேர் சொல்லி,
shopper  stop இல் offer  போடணும்.... (Andriod பெண்ணே... )

ஒரு சிறு குறு புன்னகை...
எனை பார்த்ததும் மறையுதே...
விழி மாற்றியே திரும்பிட...
எனோ மீண்டும் பூக்குதே....

தினம் விழும் ஒளி பார்வையாய்...
விழும் மழை துளி கோர்வையாய்...
புது வானிலை மாற்றமாய்...
இவன் மனநிலை மாறுதே....

அடி நீ தான், மயில் தூரிகை...
ஏழ் வர்ணம் தீட்டிய காரிகை....

வரவேற்பு....

புயலாய் ஒரு வானிலை மாற்றம்...
புதிதாய் சிறு வானவில் தோற்றம்....
அழகாய் அடி மனதினில் சாரல்...
மெதுவாய் விழி பேசிடும் காதல்...
பெரிதாய் ஒரு புன்னகை பூக்கும்...
வழியாய் சில வெட்கமும் தாக்கும்...
இவை அழகியல் மாற்றமா....???
இல்லை ஆழ்நிலை மாற்றமா...???
விரியும் இரு சிறு சிறகுகள்...
இணைந்தே விரியட்டும் உறவுகள்...
வாழ்த்திட விரைந்தே வாருங்கள்....

மீள்வாய் தமிழினமே!!!

மேற்கே சூரியனே...
மீள்வாய் சந்திரனே...
சிறைகள் ஒவ்வொன்றும் 
தவிடாய் தவிடாய்...
ஆள்வது அயலானே...
அடிமை தமிழினமே...
புதிதாய் உயிர்த்தெழுவாய் 
எழுவாய்...
நீதிக்கு சாய்வதெல்லாம்...
நம் தலையல்லவா....
நீங்காமல் கேட்கின்றோம்,
அழு குரலல்லவா???
அயலாரின் ஆட்சிக்கு 
வழிவிட்டோமே....
அற்பமாய் வாழ்ந்திங்கு,
கதறிட்டோமே...
தடைகள் எல்லாம்,
நம்முன்னே சிறுபுழுவாய்...
விலகும் விலகும்,
நிற்போமே அணிபடையாய்...
 உரிமைகள் விலைபோக,
கேளிக்கை ஒருகேடா???
வளமெல்லாம் இழந்தபின்,
வாழ்வதற்கு ஒருநாடா???
வீணாக உறங்கிட்டால்,
மீளா பிழையாகும்...
வீதிக்கு நீவாடா,
விரைந்தே விதிசெய்வோம்...
இனமொன்றை காத்திடவே,
புறப்படு என்னோடு...
புலிஆளும்  குகையில்,
நரி வாழ்வதாகாது...
எழுவாய், விரைவாய்,
துணிவாய்,  இன்றே...
தடுப்பார், நினைத்தால்,
தடுப்போம், கொன்றே....