திங்கள், 26 மார்ச், 2018

மொழிப்போர்!!!

போர் போர்,
தமிழ் மொழிப்போர்...

தமிழ் உரைப்போர்,
தினம் சுவைப்போர்,
மனம் திகைப்போர்,
புது மொழிப்போர்..

மொழி திணிப்போர்,
தலை உடைப்போர்,
மனம் துடிப்போர், 
இது மொழிப்போர்..

கலை வளர்ப்போர்,
கவி வடிப்போர்,
கடல் அளப்போர்,
முது மொழிப்போர்...

போர் போர்,
தமிழ் மொழிப்போர்...

மய்யம்....

பூவின் மீது தூவும் தூறல்...
பூக்கள் கொய்யுமா???
தேனை தேடி தீண்டிடாது,
ஈக்கள் மொய்யுமா???
உயிரின் ஓசையா???
இவை உளறல் பாஷையா????
உறங்கும்...
உறங்கும்...
நதி மடியில் விழுந்து,
இரவில் வெண்ணிலா....
இனி இமைத்திடாத 
விழிகள் எண்ணிலா???

புதன், 14 மார்ச், 2018

தமிழ்...

துருவங்கள் திசைமாறும்,
மகுடங்கள் சிரம்மாறும்,
நீர்த்தடங்கள் தடம்மாறும்...
எரிமலைகள் உருமாறும்...

மாகாணம் கடலாகும்...
பூகோளம் புதிதாகும்...
புவிஆண்ட மொழியாகும்...
மீட்சியுற புயலாகும்...

கவியரங்கம் உருவாகும்...
கலையனைத்தும் புதிதாகும்...
கவிஅனைத்தும் கடலாகும்...
நகரனைத்தும் விரிவாகும்...

மாற்றங்கள் நிலையாகும்,
ஆயின்மொழியெங்கள் மூச்சாகும்...
வித்தாகும்  விளக்காகும்
தமிழ்மொழியெங்கள் உயிராகும்....