துருவங்கள் திசைமாறும்,
மகுடங்கள் சிரம்மாறும்,
நீர்த்தடங்கள் தடம்மாறும்...
எரிமலைகள் உருமாறும்...
மாகாணம் கடலாகும்...
பூகோளம் புதிதாகும்...
புவிஆண்ட மொழியாகும்...
மீட்சியுற புயலாகும்...
கவியரங்கம் உருவாகும்...
கலையனைத்தும் புதிதாகும்...
கவிஅனைத்தும் கடலாகும்...
நகரனைத்தும் விரிவாகும்...
மாற்றங்கள் நிலையாகும்,
ஆயின்மொழியெங்கள் மூச்சாகும்...
வித்தாகும் விளக்காகும்
தமிழ்மொழியெங்கள் உயிராகும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக