விழிகள் பார்த்தகாட்சிகள் யாவும்,
வடிவம் இல்லா
மொழிகள் கொண்டு,
துருவம் தாண்டும்
கற்பனை இணைந்து,
ஆடிய நடனம்
அழகாய் இன்று,
சித்திரம் ஆனது
எந்தன் முன்பு!!!
அறியாது கிறுக்கிய,
எழுத் தெல்லாம்
படைப்புக ளானது,தலைப்பினில் தானே!!!
முகவுரை சொல்லிடும்,
முதல்வரி எழுதிய
முடிவுரை என்றும்,
தலைப்புகள் தானே!!!
விடைபெற்ற நெஞ்சமின்று,
வினாதேடி நகர்கிறதே,
விடை வந்து மீண்டும் சேர,
வினாவொன்று கேட்கிறதே!!!
இரு இமை கூடிட,
விழித்திரை ஆனதே,
ஒரு இமை ஓடிட,
உறக்கமும் போனதே!!!
ஏக்கங்கள் இல்லா,
ஆக்கங்கள் இல்லை.
ஏமாற்றம் இல்லா,
ஏக்கங்கள் இல்லை.
நம்பிக்கை நாட்களில்
நகரட்டுமே,
வானவில் கைகளில்
சேரட்டுமே!!!