அன்னமிட்டோரை அம்மா
என்றழைக்கும் உதடுகள்.
கரும்பலகை பிடிக்காமல்
கல்லுடைக்கும் கைகள்
பாடசாலை புறப்பட்டு
பட்டறையில் முடிவுற்ற கால்கள்...
எண்ணற்ற இன்னல்கள்,
இடைவிடாத மின்னலாய்
இடிஇடித்து பெய்கிறது
இவர் வாழ்வில்...
சமூக அவலத்தை
எதுகை மோனையில்
ஏற்புர எழுதும்
நான் என்ன செய்தேன்?
முதல்வரி முதல்
முற்றுபுள்ளி வரை
இடைவிடாமல் படித்த
நீ என்ன செய்தாய்?
சிந்தித்து பார்
இந்தியனே,
சிறகில்லா பறவைகள்
சிகரம் சென்றடைய...
என்றழைக்கும் உதடுகள்.
கரும்பலகை பிடிக்காமல்
கல்லுடைக்கும் கைகள்
பாடசாலை புறப்பட்டு
பட்டறையில் முடிவுற்ற கால்கள்...
எண்ணற்ற இன்னல்கள்,
இடைவிடாத மின்னலாய்
இடிஇடித்து பெய்கிறது
இவர் வாழ்வில்...
சமூக அவலத்தை
எதுகை மோனையில்
ஏற்புர எழுதும்
நான் என்ன செய்தேன்?
முதல்வரி முதல்
முற்றுபுள்ளி வரை
இடைவிடாமல் படித்த
நீ என்ன செய்தாய்?
சிந்தித்து பார்
இந்தியனே,
சிறகில்லா பறவைகள்
சிகரம் சென்றடைய...