வெள்ளி, 20 ஜூலை, 2012

பரிசு!!!

என்னை வெற்றிபெறச்
செய்தவுன் வாளுக்கு
நான்தந்த பரிசு - என்
மேனித் தழும்புகள்..

பயம்!!!

தோல்வி பயம்துரத்திக் கொள்ளும்,
வெற்றியோ விலகிச் செல்லும் 
இவை முயல்பவன் முடியாதென்று
எண்ணும் வரையில்...
வெற்றி காண வேண்டியது 
வெளியில் அல்ல? உன்னில்... 
இனி பயமும் பயந்தோட,
மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு,
வெற்றிமாலைகள் நாளை கையில்...

இனியவளே!!!

நீ இரவில் ஒளிரும் குளிர் நிலா...
உன் நிழலில் போவேன் தினம் உலா... 
என் உறக்கம் கலைக்கும் ஒரே கனா?
உன் நெஞ்சை கேட்கும் காதல் வினா...
முதல்முறை நெஞ்சில் கலவரம்,
முடிவினில் காதல் வெளிவரும்,
முகவுரை தந்து எழுதிடு 
நம்காதல் இனி தொடர்கதையாக!!!

இறைவா!!!

கல்லை பிரித்தான்,
மண்ணை பிரித்தான்,
கார்முகில் தந்த
நதியை பிரித்தான்...
வீட்டை பிரித்தான்,
நாட்டை பிரித்தான்,
இறந்தால் புதைக்க
இடமும் பிரித்தான்...
பிரித்தே வாழ்ந்தவன்,
பிரித்திட ஏதுமின்றி,
உன்னையும் பிரித்தான்,
என் இறைவா!!!