வியாழன், 9 மார்ச், 2017

ஆதவமகன்...

ஆதவன் அங்கம் அவனுடலணிய  
அவனியில் அவனும் அவதரித்தான்...
அன்னையும் அன்பினை அளிக்காது,
ஆற்றினில் அவனை அர்பணித்தாள்...
ஆற்றலை அடைந்திட அறவழியின்றி, 
ஆண்டவன் அடியை அடைந்திட்டான்...
ஆற்றல் ஆளுமை அவனிடமாக,
அவனியே அஞ்ச ஆர்பரித்தான்...
அன்னையும், அனைவரும் ஆறுதலின்றி,
ஆநிரை ஆண்டவன் அடிசேர்ந்தார்...
அதிசய ஆண்டவன் அவனெதிராக,
அங்கம் அறுத்து அன்பளித்தான்...
அக்கினி அழகன் அவனின்றி,
அத்தோழனும்  அன்றே அழிந்திட்டான்...
ஆதவமகன் அவன் அடையாளம்,
அகிலம் அவன்பின் அறிந்திட்டான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக