திங்கள், 13 மார்ச், 2017

அவள் கண்கள்..


மழையே மெல்ல எட்டி பாரு,
வானம் விட்டு மெதுவாய்...
அலையே கொஞ்சம் தொட்டு பாடு,
கரையில் கால்கள் சுகமாய்...
பனியே, விரல் தொட்டு பூக்கும்,
மலர்கள் எல்லாம் புதிதாய்...
சிறகே வந்து வட்டம் போடு,
பூமி மேலே அழகாய்...

இது புதிதாய் பூத்த நொடிகளா?
இரு இமைகள் அடைத்த மொழிகளா??
அடை மழையில் நனைந்த விழிகளா?
ஏதோ புரியவில்லை...

புது உணர்வுகள் புதிதாய் பூக்குதே...
இந்த அனலில் உடலும் சிலிர்க்குதே...
என் அணுக்கள் விடையை கேட்க சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

உன் ஒற்றை பார்வை தீயடி...
உயிர் மெல்லச்சாகும் நோயடி...
இந்த வலிகள் ஏனோ வாழச்சொல்கிறதே...
சொல்! சொல்! சொல்! நீயே சொல்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக