செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

முரண்...

காற்றில் ஏறி செல்லும் மேகம்,
வானின் மீது காதல் கொள்ளும்...
ஊடல் கொஞ்சம் மாறி போக...
வானம் இருளாகும்...
பிரிந்து சென்ற மேக கூட்டம்,
அழுது கொஞ்சம் ஆற்ற பார்க்கும்,
பிரிவு நோயின் அழுத்தம் கூட,
காணாமல் கரைந்தோடும்...
முகமுடிகள் மாற்றிபார்த்தும்,
மனவெளியில் மாற்றல் இல்லை...
முழுதாக தொலைந்த,
மேகம் போலானேன்...
வான்வெளியில் விரியாச்  சிறகு,
மரக்கொடியில்  காயும் சருகு,
இவை ரெண்டும் சேரும்,
சகதியில்  வீழ்ந்தேனே... 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாரதிரவாழ்...

தினம் நான்மணி குரல்மேவிடும்,
குன்றாடிடும் கொடியோன் - உடன் 
எழுக்காலையில் கடன்யாவையும் 
கதிராண்டவன் கரம்நீட்டு முன்செய்வாய்...

நீர்பூசிடு  நிலை நெற்றியில்,
துதிபாடிடு நுனிநாவினில் - எழு 
பிறப்பிலும் எனை ஆண்டவன்
உடன்வர தினம் துதிப்பாய்...

குடலிரண்டும் பசியாறிட குரல்
வளையினில் ஸ்வரமாடிட - எடு 
வாளினை துயர் ஆற்றிட 
அழிப்பாய்,அகல் விளக்காய்...

திசையெட்டிலும் விதிமாற்றிடு,
அறம் யாவிலும் வினையாற்றிடு - நல் 
விதிசெய்திடும் விதை யாகிடு,
வாழ்வாய், பார் அதிர வாழ்வாய்...

புதன், 16 ஆகஸ்ட், 2017

புதிய ஆத்திச்சூடி!!!

அரசியல் படி.
ஆபத்தானது அணுசக்தி.
இயன்ற மொழிகளை கல்.
ஈந்து சிவக்கட்டும் கை.
உழவனை ஆதரி.
ஊரணிகளை காத்து நில்.
எருது பேணி வளர்.
ஏய்ப்பவனை அழி.
ஐயத்துடன் அயலான் அணுகு.
ஒருமுறையேனும் மேடையேறி பழகு.
ஓங்கியடி ஒடுக்குபவனை.
ஒளரதன் ஆளட்டும். 

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

புதிய தமிழ் ஆத்திச்சூடி!!!

அரசியல் படி 
ஆபத்தானது அணுஉலை
இந்தி திணிப்பை எதிர் 
ஈகையில் சிறந்தோர் தமிழரே.
உழவனை ஆதரி 
ஊரணிகளை காத்து நில்.
எருதுகளை பேணி வளர்.
ஏய்ப்பவனை அழி.
ஐயத்துடன் அயலார் அணுகு.
ஒட்டுக்குடி மனிதரல்ல.
ஓங்கியடி ஒடுக்குபவனை.
ஒளரதன் ஆளட்டும்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

மின்விசிறி...

அந்தரத்தில்,
தொங்குதம்மா,
மூணுரெக்க,
சாதனம்...

வட்ட வடிவில்,
சுற்றும்போது,
மாயக்கண்ணன்,
சக்கரம்...

அதன்,
குடையில் அமர்ந்து,
காற்று வாங்க,
வியர்வை துன்பம்,
போகுமே...

மின்,
விசிறி போலே,
உதவி செய்து,
நாமும் வாழ்வோம்,
நாளுமே!!!