அந்தி சாயும் நேரம். இரை தேடிச்சென்ற ஊர் குருவிகள், தன் கூட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தன. குருவி கூட்டிற்கு அலங்கார விளக்குகள் மாட்டப்பட்டு இருந்தன. மின்சாரமில்லா பல குடிசைகளுக்கு மத்தியில், ஓரறிவுள்ள உயிர்களுக்கு எல்லாம் உல்லாசம் தர இந்த ஏற்பாடு! தெருவோரம் இருந்த மின்கம்பங்கள் எல்லாம் இரவிலும் பளிச்சென்று மின்னின, புத்தம் புது சாயலில். நட்சத்திர கூட்டம் சற்று கீழே இறங்கி வந்தது போல ஒரு காட்சி. ஒளி இழந்த கிழவரின் கண்களுக்கும், புத்துயிர் அளித்தது புது வெளிச்சம். இந்த தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் விடியலில் தொடங்க இருக்கும் திருவிழாவிற்க்காகத்தான். ஒரு மாதமாய் அங்கும் இங்கும் அலைந்து, உண்டியல் குலுக்கியது நடந்து கொண்டிருந்த ஏற்பாட்டில் தெரிந்தது.
மாகறல் கிராமம். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்காவில் உள்ள ஓர் அழகிய கிராமம். புராண காலத்தில் வற்றாது ஓடிய செய்யாற்று படுக்கையில் அமைந்துள்ளது. உமையாள் தன் மகன் முருகன் விளையாட, கையில் இருந்த திரிசூலத்தால் பூமியின் மீது கோடிழுக்க உருவானதுதான் இந்த செய்யாறு நதி. தமிழ்நாட்டின் ஜவ்வாது மலை தொடரில் உதயமாகி ஓடும் இந்த நதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட விவசாயிகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக இன்றளவும் விளங்குகிறது! கர்நாடகம், நந்தி மலைக்குன்றில் உதயமாகி ஓடும் பாலாற்றின் உபனதியே இந்த செய்யாறு. நிலமற்ற ஏழை விவசாயிகள், பாலாறையும், செய்யாறையும் உரிமை கொண்டாடுவது வழக்கம். நன்னீராய் ஓடிய நதி இன்று, விவசாயிகளின் கண்ணீராய், ஓடிக்கொண்டிருக்கிறது. செய்யாறுக்கு செய்வினை வைத்தவன் யாரோ? சென்னையில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடங்களாய் மாறிப்போனது இந்த பாலாறும், செய்யாறும். பகல் கொள்ளையாய் நடக்கும் மணல் கொள்ளையில் இன்று காணாமல் போய்விட்டது. பணமுதலைகள், சுவற்றில் போட்ட மணல், ஏழை விவசாயிகளின், சோற்றிலும் விழுந்ததே, காலத்தின் கட்டாயம்! சிந்திக்க நினைக்காத, சிந்தையுள்ள மனிதனே, சமுதாய சிதைவிற்கு காரணம்!
இளவெண்பா, காலையில் பூர்த்த அல்லி. அதிகாலை சூரியனின் செந்நிற கரங்கள் அவள் மேனியில் பட பொன்னிறமாய் மின்னியது. ஓய்வின்றி சுழலும் கதிரவன், இளவேண்பாவை கண்டு சில நிமிடம், உறைந்து மயங்கிப் போய்விட்டான். சூரிய கிரகணம் என்று தவறாக கணித்து விட்டார்கள் மேலை நாட்டு விஞ்ஞானிகள்... இதை வெண்பாவின் மாயமென யாரறிவார்...? அளவான அறிவு, அறிவுக்கேற்ற அழகு, அழகுக்கேற்ற திமிர். இவை மூன்றும் இருந்தால் எவரேனும் வெண்பா தான். இப்படிப்பட்ட பெண்ணை தான் தேடிகொண்டிருந்தான் மாணிக்கம். ஊர் திருவிழாவை தலைமை ஏற்று நடத்தும் பட்டதாரி. மாணிக்கம் செய்யும் வேளைகளில் இதுவும் ஒன்று. படித்தது பொறியியல், செய்வதோ கிடைத்த வேலைகளை. எங்கோ, எவனோ ஒருவன், பொறியியல் படித்து கோடிகள் சம்பாதித்ததை எண்ணி, பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பொறியியல் சேர்த்தனர். அதில் மாணிக்கமும் ஒருவன். வியாபார நோக்கோடு பல தொழில்நுட்ப கல்லூரிகளை திறந்து விட்ட, பண முதலைகளின் வாயில் சிக்கிய எலும்பு துண்டு, ஏழை மாணவர்கள். வீடு காணி என அனைத்தும், விற்று படிக்கவைத்ததன் நோக்கம், தன பிள்ளை சொகுசாய் வாழ வேண்டுமென்ற எண்ணத்தில். அனால் நிலையோ, பலபேர் வாழ்க்கை படு பள்ளத்தில். சில வருடங்களுக்கு முன்னாள் அனைவரும் அறிவியல் பயின்றனர், இன்று பொறியியல், நாளை எதுவென்று யாருக்கு தெரியும்.
மாணிக்கம் மிகவும் படபடப்பாய் இருந்தான், நேரம் இரவு 12மணி. கோவில் வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது. காலை 5மணிக்கு பூஜைகள் தொடங்கி 7மணிக்குள் கொடியேற்ற வேண்டும். ஊர்மக்கள் திரளாய் வருவர். அதே நாள் வெண்பாவை பெண் பார்க்க வரும் நாள். கையோடு நிச்சயம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி அவனுக்கு தெரிந்திருந்தது. வெண்பாவிற்கு தெரியாமல் இவை அனைத்தும் நடந்தேறி கொண்டிருந்தன. தடுத்து நிறுத்த முயன்றால் தலை போகும் என்று அவனுக்கு தெரியும். காரணம், ஊர் நாட்டமை மருதுவின் மகள். அவள். அண்ணன் முத்து கம்பீரமாக கந்துவட்டி தொழில் செய்து வருகிறான். மாணிக்கம் திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவதே, வெண்பாவின் தந்தையிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில். நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், வாழ்கையின் ஸ்வாரஸ்யம் போய்விடும். இனி நடப்பவை நடக்கட்டும் என எண்ணி தன மனதை மாற்ற முயற்சித்தான் மாணிக்கம்.
3மணி நேரமாய் என்ன செய்வதென்று தெரியாமல், மௌனமாய் நின்று கொண்டிருந்தான். ஆம், அதிகாலை 3மணி இப்போது. சேவல் கூவியதோ? இல்லையோ? இவன் மனதில் சத்தம் மட்டும் கேட்கிறது. தோரணங்கள் முதல் ஒலிப்பெருக்கி வரை, அனைத்தும் தயார் நிலையில் இருந்தன, தத்தம் சேவைகளை புரிய. நேராய் வெண்பாவின் வீட்டிற்கு சென்றான், கோவில் நடைவரை சாவியை வாங்க. வெண்பாவின் வீட்டு வாசல் கோலத்தில் வரவேற்பு செய்தி, மணமகனே வருகவென்று. பார்த்து படித்ததும், ஒரு நிமிடம் நகைத்து விட்டு கதவை தட்டினான். திறப்பது வெண்பாவாய் இருக்க வேண்டும் என்று நினைத்தான். கண்களை இறுக மூடிகொண்டான். கதவின் தாழ்பாள் திறந்த சத்தத்தில் சில வினாடிகள் அவன் மெய் சிலிர்த்தது. கண்களை திறந்தான், கண்முன் நிற்பது வெண்பா. சொல்ல நாவேடுத்தான். சொல்லிய வார்த்தை அவள் காதில் விழும் முன், அண்ணனின் குரல் கேட்டது "யார்ரா அவன்". ஒரு நிமிடம் சுதாரித்து கொண்டு, "மாணிக்கம்" என்றான். வெளியே வந்த முத்து, என்னவேண்டும் என்று கேட்க, மாணிக்கத்தின் பதில் வரும் முன்னே உள்ளே சென்றாள், வெண்பா.
வெண்பாவும் காலை கதவை திறந்தது, எதிர்பாராமல் நடந்தது அல்ல. மாணிக்கம் தன்னை தேடி வருவான் என்ற எண்ணத்தில் காத்திருந்தாள். இதுவரை இருவரும் பேசியது தனிமையில் மட்டும். மாணிக்கம், முத்துவிடம் "நடை சாவி வேணும்னே" என்று கேட்க, முத்து உள்ளே சென்று எடுத்து வந்தான். சாவியை வாங்கியவன், எதுவும் பேசாமல் கோவிலை நோக்கி மெல்ல நடந்தான், தன் முதல் முயற்சி தோல்வி அடைந்ததை எண்ணி. நேரம் காலை 3.30. மெல்ல ஊரில் உள்ள அனைவரும் எழதொடங்கினார்கள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில், வழக்கத்திற்கு மாறாய், 10பேர் வந்து இறங்கினர். வந்தவர்கள் யாருமில்லை, பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி கூட்டம். அனைவரும் கடைவீதியை நோக்கி நடந்தனர். ஒருவர் மட்டும் போகாமல் அங்கேயே நின்றார். நின்றவர், மாணிக்கத்தை பார்த்து "தம்பி தலைவர் வீடு எதுப்பா?" எனக் கேட்டார். மாணிக்கம் "சரி வாங்க காட்டுறேன்" சொல்லி அழைத்து சென்றான், வெண்பாவின் வீடிற்கு.
வந்தவர் யார் என்று தெரியவில்லை. தயக்கத்தில் தெரு முனையில் இருக்கும் வீட்டை நோக்கி நடந்தான். மறுபடியும் கோலத்தில் எழுதிய வாசகத்தை படித்தான், அனால் முகத்தில் முன்பிருந்த நகைப்பு, காணாமல் போய் இருந்தது. மெல்ல கதவை தட்டினான், திறந்தது வெண்பாவின் தந்தை. அவரிடம், "ஐயா, உங்கள தேடி ஒரு பெரியவர் வந்திருக்கார்" என்றான். யாரென்று எட்டிப் பார்த்தார் மருது. "அடடே!!! வாங்க, வாங்க, என்ன இந்த பக்கம். எதாவது விசேசமா?" என கேட்டார் மருது. வந்தவர் மருதுவின் பால்ய நண்பர் என தெரிந்ததும் பெரு மூச்சு விட்டான், மாணிக்கம். பெரியவர் தன்னை முந்திக்கொண்டு உள்ளே செல்ல, வழிவிட்டு ஒதுங்கினான் மாணிக்கம். "அம்மா, தண்ணி கொண்டு வா" என உரத்த குரலில் சத்தம் கேட்க, தண்ணீருடன் வந்தாள், இளவேன்பா. இதுவரை காணமல் பொய் இருந்த நகைப்பு மீண்டும் அவன் முகத்தில் குடியேற, வெண்பாவை கண்டான். வெண்பா தண்ணீரை, மாணிக்கத்திடம் கொடுக்க முயல, "மொதல்ல பெரியவருக்கு கொடுமா" என குறுக்கிட்டார் மருது. வெண்பாவை மீண்டும் சந்திக்க வைத்த, நன்றிக்காக தண்ணீர் செம்பை, வாங்காமல் விட்டுவிட்டான் மாணிக்கம். பெரியவர் தண்ணீர் பருக, மருது, மாணிக்கத்தை "நாற்காலி எடுத்து வர சொன்னார்". உள்ளே சென்ற, மருது திரும்பும் முன், வெண்பாவும் செம்புடன் உள்ளே சென்றாள்.
"மாணிக்கம், இங்க பாரு" குரல் கேட்டது. வெண்பாவின் குரலில், அவன் பெயரும் இன்று புதிதாய் கேட்டது அவனுக்கு. இதுதான் சமயம், சொல்லிவிட என்று எண்ணி, முற்பட்டாள் வெண்பா.
வெண்பா : "மாணிக்கம் அத எடுக்கலாம்"
மாணிக்கம்: "என் என்ன ஆச்சு?"
வெண்பா : "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
மாணிக்கம்: "என்ன ? சொல்லு"
வெண்பா : "எப்பிடி கேக்குறதுன்னு தெரில..."
மாணிக்கம்: "கோவில்ல பிரசாதம் வேணுமா? பூஜை முடிஞ்சதும் கொண்டு வந்துடறேன்"
வெண்பா : "அது இல்ல... வேற..."
"வெண்பா......, வெண்பா......" குரல் கேட்டது, வெண்பாவின் பாட்டியிடம் இருந்து. கோபத்தில், "நீ வேஸ்ட் டா" என்று சிணுங்கி கொண்டே நடந்தாள் வெண்பா. வெண்பாவின் சினுங்களை ரசித்தபடியே, நாற்காலியை தூக்கி கொண்டு, தாழ்வாரம் சென்றான் மாணிக்கம். நாற்காலியை நடையில் போட்டான். மருதுவிடம், "ஐயா நான் கோவிலுக்கு போறேன்" என்று சொல்லி கிளம்பினான். அவன் கால்கள், கோலத்தை கடக்கும் முன்பு "மாணிக்கம்.... மாணிக்கம்...." அதே குரல் கேட்டது, வேன்பாவிடமிருந்து. சந்தோசத்தில் திரும்பினான். வெண்பா ஓடி வந்து, மூச்சிரைக்க சொன்னாள், "அம்மா கூப்பிட்டாங்க" என்று. வெண்பாவை கடந்து நடக்க முற்பட்டான். வீட்டின் பின்புறம் இருந்த துளசி மாடம் அருகே சென்றான். அப்போது, மீண்டும் கேட்டது...
வெண்பா: "நில்லு...", தயக்கத்தில் நின்றான்..... திரும்பி வெண்பாவை பார்த்து,
மாணிக்கம் : "என்ன....? சொல்லு...?"
வெண்பா: "சொல்றேன்... என்ன தைரியம் உனக்கு, என்ன "நீ வா போனு" சொல்ற ....?"
மாணிக்கம்: "அதனால....? என்ன இப்போ...?"
வெண்பா: "எனுக்கு ஒன்னு தெரியனும்...?"
மாணிக்கம்: "என்ன தெரியனும்...?"
வெண்பா: "ம்... கோவில்ல பூஜை எத்தன மணிக்கு...?" கோபமாய் கேட்டாள்.
மாணிக்கம்: "நீ எப்ப சொல்றியோ, அப்ப நடத்தலாம்..."
வெண்பா: "நீ உருப்படவே மாட்ட போடா..." கோவத்தில் அவள் கண்கள் சிவந்தன... "5மணிக்கு கோவில்கு வருவாங்க , கோவில்ல இரு, எங்கயும் போய்டாத, அம்மா சொல்ல சொன்னாங்க...
மாணிக்கம்: "நீ வருவியா....?"
வெண்பா: "நீ அங்க இருப்ப நா, நிச்சயம் வர மாட்டேன்..."
மாணிக்கம்: "நான் அங்க தான் இருப்பேன், so நீ வராதா..."
வெண்பா கோவத்தில் உள்ளே சென்று பின்கதவை தாழிட்டாள்... மாணிக்கம் கிளம்பினான், இம்முறை வீட்டின் கோலத்தை கடக்கையில், பெரிய சிரிப்புடன்... காலை மெல்ல விடிய தொடங்கியது. கோவில் நடையை திறப்பதற்குள் மணி 4.30 ஆகி விட்டது. கோவில் பூசாரி, கால் கடுக்க, மாணிக்கத்தின் வருகைகாக நின்றிருந்தார். பூசாரியின் அர்ச்சனை, சிவனுடன் சேர்த்து மாணிக்கமும் பெற்றான், உள்ளிருந்தபடியே... நொடிக்கு ஒரு முறை, கோவில் வாசலை பார்த்து கொண்டிருந்தான், வெண்பாவின் வருகைக்காக... மெல்ல ஊர் மக்கள் வர தொடங்கினர், ஒருவர் பின் ஒருவராய். மருதுவும், அவர் மனைவியும், கோவிலுக்கு வந்தனர். மாணிக்கம், மருதவை வரவேற்று, கோவில் மரியாதையை செலுத்தினான். பூசாரியும், சிவனுக்கு வைத்த வணக்கத்தை, மருதுவிற்கு வைத்தார். ஊர் மக்கள் வழி விட்டு நின்றனர், மருதுவும் அவர் மனைவியும், பிரகாரதிற்கு செல்ல... வெண்பா வரவில்லை... வெண்பா, கோவில் குளத்தில் கால் நனைக்க சென்றால் அவள் பாட்டியுடன்...
மாணிக்கம், கோவில் வாசலில் இருக்கும், மருதுவின் வண்டிக்காரனிடம் சென்று கேட்டான்,
மாணிக்கம்: "ஐயா வீட்ல, எல்லாரும் வந்தாச்சா...?".
வண்டிக்காரன்: "வந்துட்டாங்க தம்பி..."
மாணிக்கம்: "பாட்டிய காணோம்...?"
வண்டிக்காரன்: "சின்னம்மா கூட குலத்துக்கு போய் இருக்காங்க, கால் நனைக்க"
மாணிக்கம்: "சரி..."
மாணிக்கம் வருவதை பார்த்த, வெண்பா, தன் பாட்டியை, குளக்கரையில், விட்டுவிட்டு வேகமாய் உள்ளே நடந்தாள்.
பாட்டி: "வெண்பா... வெண்பா... நில்லு மா.."
வெண்பா: "ஐயோ கால் சுடுது பாட்டி, நீ பொறுமையா வா..."
பாட்டி: "காலைல 5மணிக்கு கால் சுடுதா...? என்ன டா இவ...?"
வெண்பா: "ஐயோ!!!!......:-) :-) நீ வா பாட்டி நான் போறேன்"
மாணிக்கம், பாட்டியை பார்த்தான், தனியாக வந்து கொண்டிருந்தார்... ஒரு வேலை கோவில் பிரகாரம் உள்ளே இருபாள் என்று, உள்ள செல்ல தொடங்கினான், மாணிக்கம்... உள்ளே இருந்த வெண்பா, மாணிக்கம் வருவதை கண்டு, கோவில் தூண் அருகே மறைந்து நின்றாள்... கோவில் முழுக்க சுற்றி தேடினான். எங்கும் வெண்பா கண்ணில் புலப்படவில்லை. கோவில் முழுக்க 10 முறை சுற்றி பார்த்தும், கண்ணில் பட்டது, பல்லவர் காலத்து சிற்பக்கலைகளே!!! அனைத்தையும் கோவில் சிலை ஓரம் நின்று பார்த்து கொண்டிருந்தாள், வெண்பா... கோவில் சிலை ஓரம், சிலை என நின்ற, வெண்பாவை சிற்பமென நினைத்து விட்டது, அற்பமான அவன் கண்கள்.... கண்முன் தெரிந்த சிலையிடம் சென்று, கோவில் கட்டிய பல்லவ மன்னனை, கடுமையாக திட்டினான், கோவிலை பெரிதாக கட்டியதற்கு.
மாணிக்கம்: "கோவில கட்ட சொன்னா, என்னடா கட்டி இருக்கான்...? எங்க தேடியும் அவல மட்டும் பாக்க முடியலையே..." சிலை மெல்ல அவனிடம் நகர்ந்து வர, கண்டுகொண்டான், சிலை அல்ல, அது வெண்பாவென்று....
வெண்பா: "என்ன, சிலைய பார்த்து, எதோ சொல்லிட்டு இருக்க...?"
மாணிக்கம்: "அதெல்லாம் ஒன்னும் இல்லையே...? ஹி ஹி ஹி"
வெண்பா: "பாத்து, நீ பேசுறது கேட்டு, சிலைக்கு காது செவிடாகிட போது..."
மாணிக்கம்: "நான் பேசுறது சிலைக்கு கேட்டுச்சோ இல்லையோ?, உனக்கு கேட்டுது இல்ல...?"
வெண்பா: "oh நீ பேசுனியா!!!, எதோ ஒலருணா மாதிரி இருந்துது..."
மாணிக்கம்: "சேரி ஒளர்ரத, முழுசா கேட்டுட்டு போ..."
வெண்பா: " அத, அந்த சிலை கிட்ட போய் சொல்லு..."
மாணிக்கம்: "சொல்றேன்... சொல்றேன்... இதனால தான், எனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... இதனால தான்... அளவான அறிவு, அறிவுக்கு ஏத்த அழகு, அழகுக்கு ஏத்த திமிரு!!! இதனால தான், எனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... I love you.... நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்"
மாணிக்கம் சொல்லி முடித்ததும், கோவில் மண்டபத்தை விட்டு ஏதும் பேசாமல் நகர்ந்தாள்... மண்டபத்தை விட்டு வெளியே கால் வைக்கையில், இடித்தது பேரிடி, பொழிந்தது பூமழை... வெண்பா வெளியேற முடியாமல், அவனை பார்த்து வெட்கத்தில் தலை குனிந்தாள்... வான் மேகம் வாழ்த்துகள் சொன்னது வைகறை தூறல்களாய்....!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக