வியக்க வைக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. சுற்றிலும் அழகாய் வர்ண பூச்செடிகள். உழைக்காமல் உட்க்கார்ந்து வேலை செய்துவிட்டு, உடம்பை குறைப்பதற்காக நத்தைபோல் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறம். தன் வீட்டுவேலை செய்யாது, முதுகுவலி, மூட்டுவலி என்று, நடைவாசலில் விடைதேடும் கூட்டம் ஒருபுறம். அதிகாலை என்பதை அறியாமல், போர்த்திதூங்கும் சோம்பேறிகள் கூட்டம் ஒருபுறம்.
நடுத்தர மக்களின் சொந்தவீடு கனவை தகர்த்து விட்டு, பணக்கார வர்கத்தை கூட்டு சேர்க்கும் முயற்சியில், கட்டுமான தொழிலதிபர்கள் கண்ட கனவு குழந்தை இந்த பகட்டான அடுக்குமாடி குடியிருப்புகள். ஆனாலும் அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை. அங்கேயும் ஏழைகளுக்கு ஓர் இடமிருந்தது காலத்தை கடத்த. வீட்டுக்காரனாய் அல்ல, அவர்களுக்கு வேலைக்காரனாய். எவர் வாசல் என்று தெரியாது, முழுவதுமாய் சேர்த்து, முறைவாசல் செய்து போகவும்; கையாடல் பணத்தை, களவாடியின் கைகளிலிருந்து காவல் காத்து, வாசலில் கால்கடுக்க நிற்கவும். இவைகளை ஒளிந்திருந்து கண்ட, மறைந்திருந்த சூரியன் மெதுவாய் எழுந்தான், இரு கட்டிடங்களுக்கு மத்தியில்.
நடுத்தர மக்களின் சொந்தவீடு கனவை தகர்த்து விட்டு, பணக்கார வர்கத்தை கூட்டு சேர்க்கும் முயற்சியில், கட்டுமான தொழிலதிபர்கள் கண்ட கனவு குழந்தை இந்த பகட்டான அடுக்குமாடி குடியிருப்புகள். ஆனாலும் அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை. அங்கேயும் ஏழைகளுக்கு ஓர் இடமிருந்தது காலத்தை கடத்த. வீட்டுக்காரனாய் அல்ல, அவர்களுக்கு வேலைக்காரனாய். எவர் வாசல் என்று தெரியாது, முழுவதுமாய் சேர்த்து, முறைவாசல் செய்து போகவும்; கையாடல் பணத்தை, களவாடியின் கைகளிலிருந்து காவல் காத்து, வாசலில் கால்கடுக்க நிற்கவும். இவைகளை ஒளிந்திருந்து கண்ட, மறைந்திருந்த சூரியன் மெதுவாய் எழுந்தான், இரு கட்டிடங்களுக்கு மத்தியில்.
சூரியன் ஒவ்வொரு வீட்டு சன்னலின் வழி எட்டிப்பார்த்து, தூங்குவோர்களை எழுப்பிக்கொண்டிருந்தான் வெப்ப சலனத்தில். ஆனால் ஓர் வீட்டில் மட்டும் அவனுக்கு வேலையில்லாமல் போயிற்று. அவனை மகிழ்விக்க சுப்ரபாதம் ஒளித்து கொண்டிருந்தது. ஆம் அது தான் நங்கையின் வீடு. நங்கை என பெயர் கொண்ட மங்கை அவள். சங்ககாலத்தில் பிறந்திருந்தால், கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறிய 99 பூக்களுடன் இவளையும் சேர்த்து நூறென உரைத்திருப்பான். சமகாலத்தில் பிறந்ததால், முடியாமல் போயிற்று. சூரிய நமஸ்காரம் செய்ய கதவை திறந்து உபரிகையில் நின்று மெல்ல வணங்கினாள், இறைவனை.
நங்கை 'Infosys' நிறுவனத்தில் நிரலர் பணிபுரிகிறாள். கைநிறைய சம்பளம். இருமுறை வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த வருவாயில், வாங்கிய வீட்டில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறாள். அன்று ஞாயிற்று கிழமை. தன் பெற்றோருக்கு தேநீர் கொடுத்துவிட்டு, தானும் ஒருகையில் தேநீருடன், மறுகையில் தினமலரை புரட்டினாள், அப்பாரதி கண்டிலா புதுமைப்பெண்.
நங்கை 'Infosys' நிறுவனத்தில் நிரலர் பணிபுரிகிறாள். கைநிறைய சம்பளம். இருமுறை வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த வருவாயில், வாங்கிய வீட்டில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறாள். அன்று ஞாயிற்று கிழமை. தன் பெற்றோருக்கு தேநீர் கொடுத்துவிட்டு, தானும் ஒருகையில் தேநீருடன், மறுகையில் தினமலரை புரட்டினாள், அப்பாரதி கண்டிலா புதுமைப்பெண்.
மணி காலை 10. வீட்டிலிருந்து உடனே வெளியே புறப்பட்டாள். முகத்தில் ஒரு புதுவித தெளிவு. அருகிலிருக்கும் பூங்காவிற்கு வர சொன்னான் சஞ்சய். சஞ்சய், நங்கையுடன் பணிபுரிகிறான். பிறந்தது, படித்தது, வளர்ந்தது அனைத்தும் கிராமம் தான். நாகரிகம் என்பது, பண்பாட்டுடன் கூடிய பரந்த மனப்பான்மை என்பதில் மிக உறுதியாய் இருப்பவன். நங்கையின் வரவை எதிர்பார்த்து, காத்திருந்தான் பூங்காவின் மரத்தடியில். புதிதாய் தன காதலை சொல்வதர்க்கல்ல. சில வருடத்திற்கு முன்னர், தான் சொல்லிய காதலின் விடையை அறிந்துபோக. நங்கை தன் 'scooty'யை, நிறுத்திவிட்டு, முன்னோக்கி நடந்தால், அவனைப் பார்த்துக்கொன்டே. கைநிறைய வருமானம் இருந்தாலும், இரு கண்ணாடி வளையலை கைகளில் மோதவிட்டு, நேர்த்தியான தன நடைக்கு மெல்லிய பின்னணி இசை அமைத்தவள் நங்கை:-) வெறும் நடை, உடையை கண்டு வந்ததில்லை அவன் காதல். மருந்திற்கு கூட, அடுத்தவரின் ஏளன பேச்சுகளை பேசியதில்லை அவள். தனக்காக வேண்டி, எப்படியும் வாழலாம் என்று பொதுவாக மக்கள் என்னும் வேளையில், தனக்கென ஓர் வரையறை வைத்து வாழ்பவள் அவள். நவநாகரிக உலகில், மேற்கத்திய போதையில், நடை உடையை தொலைத்துவிட்ட சிலருக்கு மத்தியில், நங்கையை கண்டு அவன் மயங்கியதில் ஆச்சர்யமில்லை.
நங்கை எதிரே வருவதை கண்டு, சிறு புன்னகையுடன் எழுந்தான் அவன்.
சஞ்சய்: ஹெலோ, பாத்து ரொம்ப நாளாச்சு, நல்ல இருக்கியா?
நங்கை: yeah, நல்ல இருக்கேன், நீ எப்டி இருக்க...?
சஞ்சய்: Am fine. So, thanks for coming.
நங்கை: சொல்லு, என்ன திடீர்னு வரசொன்ன?
சஞ்சய்: நீ என்ன idea ல இருக்க?
நங்கை: நீ எதுவும் நினைக்காத, நான் ஒரு ideaலயும் இல்ல.
சஞ்சய்: எப்ப உன்னோட கல்யாணம்...?
நங்கை: சீக்கிரமா இருக்கும். வீட்ல பாப்பாங்க. உனக்கு?
சஞ்சய்: பாக்கணும். இப்ப இல்ல.
நங்கை: நீ உன் வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. அட்வைஸ் பண்றேன்னு நெனைக்காத.
சஞ்சய்: நீ final லா என்ன சொல் வர?
நங்கை: எனுக்கு இந்த காதல் எல்லாம் நம்பிக்கையே இல்ல, also எனுக்கு அதுல ஒரு ஐடியா வும் இல்ல.
சஞ்சய்: நான் உன்ன love பண்ண சொல்லல. என்ன Marriage பண்ணிக்க சொல்றேன்.
நங்கை: உன்மேல எந்த தப்பும் இல்ல. leave it. இது நடக்காது.
என்று சொல்லிவிட்டு, அவனை தாண்டி நடக்க தொடங்கினாள், நங்கை. உடன்,
சஞ்சய்: நங்கை, wait.
அவள் திரும்பாமல்,அப்படியே நின்றாள்.
சஞ்சய்: உனுக்கு பிடிச்சா தானே Marriage கு ok சொல்லபோற. Its ok. என்ன பிடிக்கலங்குரத, harsh ஆ சொல்லாத, உன்னோட culture தான், எனுக்கு உன்ன ரொம்ப புடிக்க காரணம். Sorry for troubling you. நீயாவது சந்தோஷமா இரு.
இருவரும் சில நொடி மௌனமாய் ஒருவரை ஒருவர் பாராமல் நின்றனர். பின், நங்கை மெதுவாய் தன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாள். அவனோ, சில மணிநேரம் மௌனமாய் அங்கேயே அமர்ந்தான்.
புதியன முயன்று வசீகரிக்க தவறியதாய், தோற்றவனை காலம் குறைகூறும். ஆனால், அவனொன்றும் நடிகனில்லை, வேடம் தறித்து களவாட. ஏனெனில், வேடம் கலைந்ததும், எண்ணம் மாறிவிடும். மாற்றங்களை காண துடிக்கும் கண்களுக்கு, காட்சிகளின் எளிமை புரியாது போனது, முற்றிலும் விந்தையே! புதியன கேட்க விழையும் செவிகளுக்கு உரக்க சொல்வது ஒன்று மட்டுமே, நாளொருவண்ணம் நடிகனாய் வாழ்பவன், தொடர்ந்திட முடியாது ஓர்நாள் தோற்றுப்போவான். இயல்பாய் வாழ்ந்திட வழிவகுக்கும் தோல்வியும், ஒருவகை வெற்றியே! இவாறான பலவகை எண்ணங்கள் அவன் மனதில், சங்கமிக்க தொடங்கியது.
தந்தையின், தாயின், அளவற்ற அன்பில், கட்டுண்ட பெண்கள் மனதை வெளிப்படையாய் சொல்லிட வழியில்லை. தன்னைப்பற்றி தாய் என்ன நினைப்பாரோ? தந்தை என்ன நினைப்பாரோ? என்ற அச்சத்தில் சுயகௌரவ விலங்கினை உடைத்தெறிந்து, பிடித்தவனை கரம்பிடிக்கும் சுதந்திரம் என்றைக்கும் நம் நாட்டில் பெண்ணிற்கு இல்லை. அதனால் தானோ? அவர்தம் மனதினை தாழிட்டு வைத்துள்ளனர்.இவைகளை எண்ணிக்கொண்டே, நங்கையும், வீட்டினை அடைந்தாள்.
மாற்றங்கள், மட்டுமே மெய்யென என்னும், இவ்வுலகில், இவ்விருவரின் மனதும் மாறாதிருப்பது, மாற்றத்தினை பொய்யென்று உணர்த்திடுமோ?. இருமனம் சேரும், திருமண சடங்கை, வீட்டின் கௌரவ தேரில் ஏற்றியவன் யாரோ? அறம் என்ற கயிற்றில், காதலை தவறென்று கட்டிபோட்டவன் யாரோ? அடுத்தவர் கதை பேசும் வீணர்களின், ஏளன பேச்சுக்கு அஞ்சி சமூகத்தில் காதல் திருமணத்தை தவறென்று உரைத்தவன் யாரோ? மானுட வாழ்வின், அன்பென்ற ஒப்பற்ற விடையை தொலைத்துவிட்டு, விடைதெரியா பற்பல கேள்விகளுடன், வெற்றிடம் இல்லா வினாத்தாளாய் நிற்கிறது இவிருவரின் காதல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக