சனி, 11 ஆகஸ்ட், 2018

தூய்மை....


எழுதிய,
காகிதம்,
கறையாகி,
சொன்னது,
முதல்,
விமர்சனம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

#தூத்துக்குடி...

இது தமிழ்நாடா??? 
இல்லை சுடுகாடா???
காட்டுமிராண்டி கூட்டத்திற்கு,
காவலென்று ஒருபெயரா???
பிச்சையெடுக்கும் நாய்களுக்கு,
துப்பாக்கி ஒருகேடா???
பிணமாக வாழ்வதற்கு,
வளமான தமிழ்நாடா???
வாய்க்கரிசி தந்துவிட்டு,
அனுப்பியது சுடுகாடா???
நேற்றுவரை வீசிய காற்றில் 
#Copper நெடி. 
சுவாசித்த மக்களுக்கு கூடுதலாய்,
துப்பாக்கிநெடி

நேற்று மெரினா...
இன்று தூத்துக்குடி...
நாளை சேலமோ??? 
தேனியோ???
இல்லை முழு தமிழகமோ???
வடிந்த ரத்தம் உறையுமா???
பத்து லட்சம் நிவாரணமா???
இது தமிழ்நாடா???
இல்லை சுடுகாடா???

வெள்ளாடை...

அணிந்த 
அனைவருக்கும் 
பெருமை 
அளித்தாய்...
குங்கும 
கரையற்ற 
மங்கையை 
தவிர...
வெண்மையே, 
பிடிக்கவில்லை.
நீ அடக்கிய,
வர்ணங்களை,
அவள்மீது 
அவிழ்த்துவிடு,
வெண்கறைகள்,
மறையட்டும்...
வர்ணங்கள் 
பிறக்கட்டும்...

#நாட்டுப்புறப்பாட்டு

தலையில்  வெச்சபானை 
வெண்ணையும்  ததும்பி,
முகமொத்தம்  வழிய,
என்ன அழகியடி...
நீதான் என்ன அழகியடி...

இடையில் வெச்சகுடம்,
ஏகாந்த வார்த்தையில்,
வாய்விட்டு சொல்லுது,
என்ன அழகியடி....
நீதான்  என்ன அழகியடி... 

கொண்ட சேவல் போல,
சங்கு கழுத்துல,
சத்தம் உசுப்புதடி....

கெண்டக்காலு ரெண்டு,
எட்டி குதிக்கையில்,
நெஞ்சு தெறிக்குதடி....

பருத்தி சேலை கட்டி,
பவழமல்லி ஒன்னு,
பட்டுனு ஓடுதடி....


#மீள்எழுச்சி....

எதிர்காலமே இருள் ஆகுதே,
வளமயாவுமே விலை போகுதே...
எதிர்ப்போமடா எமன் ஆயினும்...
முன்னேறி நீ வாடா,
முடி சூடடா...

வளராமலே பிறை தேயுதே,
வணங்காமலே முடி ஆளுதே,
உயிர்யாவிலும் அனல் கூடுதே,
முன்னேறி நீ வாடா,
முடி சூடடா...

துயரம்...
துயரம்...
காக்கும் காவல்
கல்லறை குழியில்,
நமைசேர்த்ததேன்????

விடியும்...
விடியும்....
விரல் மையை தீண்டி,
வாக்கை மாற்று,
கரைசேருவோம்....

அம்மா... பிள்ளை....

அம்மா...
கருவில் வளரும் காதல் கீற்று,
மனதை மயக்குதே...
மயங்கும் மனது உறங்கிடாது,
மழலை  ரசிக்குதே....
விரைந்து வளர்ந்து உலவ வா வா...
மடியின் மீது தவழ வா வா...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேருமோ???

பிள்ளை...
என் உருவம்  உதிரம் உனதுநிழலே ,
நானும் தோன்றினேன்...
உன் இதயம் எழுப்பும்  இசையை கேட்டு,
நாளும் தூங்கினேன்...
வெளி உலகம் காண ஏக்கமில்லை...
சிலகாலம் தானே கருவின் எல்லை...
கண்முன்னே, என் விண்மீனே...
கண்மூடி நீ தூங்கு கைசேருவோம்...

அம்மா...
மானும் மயிலும் ஓடும் ஆடும்,
மாலை நேரமே....
மயங்கிடாது குயிலும் கூவும்
மாரிஜாலமே....
கிளிகள் பேசும் இரவில் கொஞ்சம்...
கேட்கும் நூறு இசைகள் நெஞ்சம்...
கண்முன்னே... சில விண்மீனே...
கண்மூடி நான் தூங்க கைசேரவா....

பிள்ளை....
மானின் ஓட்டம் மயிலின் ஆட்டம்,
நானும் காண்கிறேன்...
மயங்கிடாது குயிலின் இசையை,
ரசித்து கேட்கிறேன்...
உனது பேச்சு கிளியை மிஞ்சும்...
உனது சுவாசம் வசந்தம் என்றும்...
கண்முன்னே... நீ விண்மீனே...
கண்மூடி நீ தூங்க தாலாட்டுவேன்....

எழுதுகோல்...

என்  அங்கம்  செதில் 
செதிலாய்  சிதைந்தாலும் 
காகிதத்தில் மரண 
வாக்குமூலம் எழுதுகிறேன்..

தாள் பிடித்து எழுதிய,
கரங்கள் எல்லாம்,
என் தலை பிடித்து,
சீவிக்கொண்டே இருந்தன.

ஒவ்வொரு சீவலுக்கும்,
ஒருபக்க கதை, கவிதை, 
கட்டுரை, வரைவுயென  
விரைந்து கொண்டே இருந்தேன்.

கிறுக்கல்களாய் நேராயின,
பிஞ்சு கரங்களுக்கு.
நடுக்கங்கள் உண்டாகின,
வயோதிக கைகளுக்கு.

இவ்வுலகில் தோன்றிய 
அணைத்து படைப்புகளையும்,
முதலில் படித்தவன் நான்.
மற்றவர்க்கு தாளில் வடித்தவன் நான்.

ஒவ்வொரு முறையும்,
அங்கம்  சீவச்சீவ வடிந்த 
என் உதிரத்தில் வரலாற்றை,
எழுதிக்கொண்டே போகின்றேன்.

நானே மறுமுறை பிறந்து,
மாற்றி எழுதுகிறேன்.
நானே மீண்டும் பிறந்து,
புதியன படைக்கிறேன்.

சட்டங்களில் உள்ள 
கையொப்பமும் நான்.
கவிதைகளில் 
முற்றுப்புள்ளி நான்.

அனைவரின் தலைவிதியை,
உருவாக்குபவனும் நான்.
சிலரின் தலைவிதியை,
மாற்றி எழுதுபவனும் நான்.

பாமரனின் கையோ?
படைத்தவனின் கையோ?
அடிமையின் கையோ?
ஆள்பவனின் கையோ?
பேதமில்லை எனக்கு.
எழுதுவதே இலக்கு!!!

நிலமங்கை...

பகலவன் சாயும் பொழுது,
பறக்கையில் அசையா சிறகு,
வரையாத  வெற்றிட காகிதம்,
தீட்டாத வானவில் வர்ணம்,
மங்கையின் நாவிதழ் நடனம்.
சொற்களின் இடையே மௌனம்,
நீள்கின்ற தலையணை முணுகல்,
சட்டென்று உடையும் மொழிகள்.
வளையாது செல்லா நதிகள்,
உப்பாகும் சேர்கின்ற கடல்கள்,
வான்மீது மிதக்கும் முகில்கள்,
வயல்மீது தெளிக்கும் துளிகள்.
வானத்தை தொடுகின்ற அரண்கள்,
அதனுள்ளே ஊற்றெடுக்கும் குமிழிகள். 
பறவைகள், பட்சிகள், விலங்குகள்,
பிடித்து கதைவடைத்த மனிதர்கள்.
திமில் பிடித்த கைகளில்,
திரை நீக்கி காண்கிறேன்,
இவையாவிலும் நீயே அழகு...
நிலமங்கை அழகு...

#உடன்பிறப்பே!!!

#உடன்பிறப்பே!!!
ஓய்வறியா சூரியனே,
ஓலைக்குடிசை நாயகனே...
இயல்தமிழ் கொற்றவனே,
இசைத்தமிழ் வித்தகனே,
முப்பாலை உலகறிய 
ஊட்டிவிட்ட வள்ளுவனே...
சொல்லாற்றல் அரசனே,
சுயமரியாதை உற்றவனே...
அஞ்சுகம் பெற்ற  அகல்விளக்கே!
அண்ணாவின் விடிவிளக்கே.
சாக்கடை அள்ளியவனுக்கு,
சமத்துவபுரம் தந்த பெரியாரே... 
பலமுறை தோற்ற காலனுக்கும்,
இம்முறை ஏன் பரிசளித்தாய்???
அயர்ந்து கண்ணுறங்கு தமிழே!!!...
உன்நாவிற்கு  நான் அடிமை...
அத்தமிழே உனக்கடிமை...
அத்தமிழே உனக்கடிமை...

#கலைஞர் #இலவச #மின்சாரம்...

#கலைஞர் #இலவச #மின்சாரம்...
உன்னால் உயிர்பெற்ற
நெல்மணிகள் கதறுதடா...
வாய்க்கரிசி ஆனதென்ன
கொடுமையடா....

#கலைஞர் #தரம்.

#கலைஞர் #தரம்.
கலைஞர் மறைந்ததை,
கம்பீரமாய் சொன்னது,
அவர்  அளித்த,
தொலைக்காட்சிப்பெட்டி...