தலையில் வெச்சபானை
வெண்ணையும் ததும்பி,
முகமொத்தம் வழிய,
என்ன அழகியடி...
நீதான் என்ன அழகியடி...
இடையில் வெச்சகுடம்,
ஏகாந்த வார்த்தையில்,
வாய்விட்டு சொல்லுது,
என்ன அழகியடி....
நீதான் என்ன அழகியடி...
கொண்ட சேவல் போல,
சங்கு கழுத்துல,
சத்தம் உசுப்புதடி....
கெண்டக்காலு ரெண்டு,
எட்டி குதிக்கையில்,
நெஞ்சு தெறிக்குதடி....
பருத்தி சேலை கட்டி,
பவழமல்லி ஒன்னு,
பட்டுனு ஓடுதடி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக