செவ்வாய், 5 அக்டோபர், 2010

தமக்கை!!!

'அ' னாவை அன்னைக்கு விட்டு,
'ஆ' வன்னா முதல்
'ஃ' ன்னா வரை
கரம்பிடித்து கற்பித்தாய்!

சிறுவிரல் பிடித்து,
குறுமணல் மிதிக்க,
தத்தி தவழ்ந்தவனை,
தலைநிமிர நடக்கவைத்தாய்!!

இருள் தெரியாதவாறு,
இமைகளை இறுகக்கட்டி,
அதிகம் அலையவிடாமல் அகப்பட்டு,
கண்ணாமூச்சி ஆடினாய்!!!

மூவாறு வருடமாய் தெரிந்த,
முதல் தோழியை,
மாமன் மணமுடிக்கையில்
கண்ணில் நீர்கசிய தெரிந்தது,

முதன்முதலாய்
தம்பிக்கு தமக்கையல்ல,
அன்னையென்று,
ஆனந்தமாய்!!!

எப்படி சொல்வேன்...?

இளையோர் முதியோரென
இனம் பாராமல் இளைப்பாரவிட்டு,
வழிமாறி வானுலா வந்த
பறவைகளின் பசி தீர்த்து,

மண் வளமுற மனமார,
மாறியை பொழியச்செய்து,
இயற்கையின் இன்னலில் பொருளிழந்து,
அறைகூவளிட்டோரை அரவனைத்ததை,

ஓரறிவுள்ள நான் எப்படி சொல்வேன்,
வெறும் சாலையோர மரமென்று எனை,
வேறு வேறாய் வேரறுக்கும்,
ஆறறிவுள்ள மானிடர்களிடம்...?

திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா

உயிரும், மெய்யும்,
இவை இரண்டும்,
சேர வருமொன்ரும்,
ஒன்றாக உச்சரித்தால்
ஒலிக்கும் ரீங்காரம்!!!
மண்ணில் பிறந்தவர்கெல்லாம்,
இதுவே தேவாரம்!!!

இயற்கை முரண்!!!

மேகத்தின்,
கண்ணீர் அஞ்சலி,
வறண்ட பூமிக்கு,
வாழ்வளிக்கும்
பன்னீர் அஞ்சலி!!!

கால்தடம்...

கால்தடம் தேடி,
கடற்கரை நோக்கி,
ஓர் பயணம்.

என் சுவடுகள் தெரிந்தது,
அதை சேரும் முன்னே,
அலைகடல் அழித்தது!!!

கரை முடிந்தாலும்,
என் பயணம் தொடரும்,
கடலில் கரைந்துவிட்ட,
என் காலடி தடம் தேடி!!!

கல்லூரி!!!

புங்கை மரத்து
புன்னகை நிழலில்,
பூத்து குலுங்கும் - பூவின்
வாசம் நுகர்ந்து, பின் அமர்ந்து

இன்னலை மறந்து, இன்னிசை பாடி,
இனியவை பேசி, இயன்றதை கற்ற
கல்லூரி வளாகம், இளமான்களின்
ஆண்டில், இனியவை நான்கு!!!

செவ்வாய், 29 ஜூன், 2010

நதியின் கண்ணீர் துளிகள்!!!

மலையில் பிறந்து,
தரையில் தவழ்ந்து,
ஆற்று படுகையை - அன்றாடம்
அழகுற நனைத்து

பூமியின் வெடிப்பிற்கு
புத்துயிர் தந்து
கிளைகளாய் பிரிந்து - நீர்
நிலைகளை உருவாக்கி

கரையோர வேர்களை,
வாடவிடாமல், காத்திருக்கும்
கொக்கின் பசி - தீர்த்து
பயனளித் ததை

எப்படிச் சொல்வேன்
என்னை துளிதுளியாய்
கலங் கடிக்கும் - சாய
பட்டறை களிடம்.

உழைப்பவன் பிழைப்பு

அரை வயிற்றுக்காக
ஆறு கல் தூரம்
வண்டி இழுத்தான்
உழைப்பாளி.

அவன் இழுத்ததில்
நன்றாக சுழன்றது,
வண்டி சக்கரம் மட்டுமே,
அவன்
வாழ்க்கை சக்கரம் அல்ல.

கால்பந்து

ஒற்றை பந்தை
உதைத்தோடி,
எதிர்க்கும் வீரனை
தடுத்தாடி,
மின்னல் வேகத்தில்,
அணியின்
இன்னல் தீர்க்க,
வலையில் சேர்த்தால்,
நாடே போற்றும்
கால்பந்து வீரனை.
நாம் எப்போது போற்றுவோம்?
நம் நாட்டு வீரனை.

ஞாயிறு, 20 ஜூன், 2010

வியப்பு!!!

நித்தமும் யாரென?
நினைவுகள் சொல்லிட,
சிந்தையில் ஆடிடும்,
சித்திரம் நீயடி.!!!

வித்தகன் நெஞ்சினில்,
விளைந்ததை சொல்லிட,
குற்றமும் நேர்ந்தது,
விந்தைகள் தானடி!!!

வியாழன், 3 ஜூன், 2010

குறி!!!

இமையை எரித்தாலும்,
இலக்கினை குறிவை,
வெற்றியை வேட்டையாட!!!

செவ்வாய், 4 மே, 2010

நாளை...


இன்று,
எழுதபடாத இலக்கியம்,
உன் வாழ்க்கை.

அதை போற்றப்படும்,
காவியமாய் மாற்று,
நாளை...

வியர்வை

மரத்தில்,
கிளைகள் சில,
கனிகள் பல,
வேர் ஒன்று தான்...

உன் வேர்வையை,
வேரூன்ற செய்...
தீமைகள் சிலவாயினும்,
நன்மைகள் பற்பல...

வெட்கம் :-)


கதிரவன் கரங்கள்,
நீரில் மூழ்கின,
தாமரை மொட்டோ,
வெட்கத்தில் வெளியேறி,
சிவந்தது.
பின்,
மெல்ல மலர்ந்தது...

ஞாயிறு, 21 மார்ச், 2010

பிரிவு...

கண்ணன் கை குழலாக,
மன்னன் மணிமுடியாக,
மண்ணில் புது மழையாக,
எனை மறந்தவள் வாழ்வாள்...

கற்பனை

வீசும் காற்று இல்லை என்றால்,
பூவின் வாசம் எங்கே போகும்...?
பூவின் வாசம் நீ,
உன்னை கவர்ந்து செல்லும் காற்றாக நான்...
என்றென்றும்...