புதன், 3 ஆகஸ்ட், 2011

அடுத்தது என்ன?

உதடுகள் கேட்டிடும்
கேள்விகள் எல்லாம்,
கற்பனை ஆகிடும்,
கனவுகளாலே.

நெஞ்சம் சொல்லிடும்
விடைகள் எல்லாம்,
வெற்றிகள் தந்திடும்,
நிகழ்வுகளாலே!!!

சனி, 16 ஜூலை, 2011

சித்திரம்!!!

விழிகள் பார்த்த
காட்சிகள் யாவும்,
வடிவம் இல்லா
மொழிகள் கொண்டு,
துருவம் தாண்டும்
கற்பனை இணைந்து,
ஆடிய நடனம்
அழகாய் இன்று,
சித்திரம் ஆனது
எந்தன் முன்பு!!!

புதன், 6 ஜூலை, 2011

தலைப்பு!!!

அறியாது கிறுக்கிய,
எழுத் தெல்லாம்
படைப்புக ளானது,
தலைப்பினில் தானே!!!

முகவுரை சொல்லிடும்,
முதல்வரி எழுதிய
முடிவுரை என்றும்,
தலைப்புகள் தானே!!!

வினாவிடை

விடைபெற்ற நெஞ்சமின்று,
வினாதேடி நகர்கிறதே,
விடை வந்து மீண்டும் சேர,
வினாவொன்று கேட்கிறதே!!!

உறக்கம்!!!

இரு இமை கூடிட,
விழித்திரை ஆனதே,
ஒரு இமை ஓடிட,
உறக்கமும் போனதே!!!

நம்பிக்கை!!!

ஏக்கங்கள் இல்லா,
ஆக்கங்கள் இல்லை.
ஏமாற்றம் இல்லா,
ஏக்கங்கள் இல்லை.
நம்பிக்கை நாட்களில்
நகரட்டுமே,
வானவில் கைகளில்
சேரட்டுமே!!!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நட்பு!!!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து,
எதிரெதிரே நிற்கிறோம்,
நட்பின் முகவரி கொண்டு.

சிரிக்க வைத்தாய்,
சிந்திக்க வைத்தாய்,
பின் மனச்சிறையில் மெல்ல
அடைத்து வைத்தாய்.

நாட்கள் நகர்ந்திடும்,
நினைவுகள் மறந்திடும்,
என்றாவது ஒருநாள்,
எங்கோ ஒர்குரல்,
பெயர் சொல்லி அழைக்க,
இன்றே நினைக்கிறன்,
அந்நாள் ஒரு பொன்னாள்!!!

மாற்றம் காண்பதே,
உறவின் அடையாளம்,
மாறாதிருப்பதே நட்பின்,
வெகுமானம்!!!

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இடைவெளி!!!


பாதையோ நெடுந்தூரம்,
பயணமோ தடுமாறும்,
பார்ப்பவர் சிலநேரம்,
காட்சிகள் நிலைமாறும்.

மனதிலே ஒருராகம்,
மயக்கமே உருவாகும்,
மாற்றமே நிலையாகும்,
இலக்குகள் தொலைவாகும்.

நினைப்பவை நடந்தேற,
தடைகளும் தடுமாற,
உடைத்திடு இடைவெளி,
உருவாகும் நல்வழி!!!

கேள்வியும், பதிலும்

உனக்காக நான்
எழுதும் எழுத்தெல்லாம்
என்னிடம் கேட்கும்,
எதற்காகவென்று?

விடைதராது உன்போல்
மௌனமாய் இருந்தேன்
நானும், எனைபார்த்து
கேட்ட கேள்விகளுக்கு!!!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திருவாளர் திருமதி!!!


ஆணும் இல்லை,
பெண்ணும் இல்லை,
அவர்தம் நெஞ்சில்
பேதம் இல்லை.

ஊரும் இல்லை,
பேரும் இல்லை,
உறவுகள் மட்டும்
உரிமை இல்லை,

தீதும் இல்லை,
கேடும் இல்லை,
இவரால் நாட்டில்
ஊழல் இல்லை.

தனிமை உண்டு,
துயரம் உண்டு,
இவரிடம் கற்க
துணிவும் உண்டு.

ஆனாய் பிறந்தவன்,
ஆதிக்கம் செய்கிறான்,
பெண்ணாய் பிறந்தவள்,
பேதைமை பார்க்கிறாள்,

மக்களை மாற்ற
மண்ணில் பிறந்த
அர்த்தனார் ஈசனே!!!

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஆசான்!!!


அந்தியில் மறையும் ஆதவன்,
வீட்டில் விளக்கேற்ற.
அன்றியும் மறையா இறைவன் நீ,
வாழ்வில் ஒளியேற்ற.
நாயகனாய்
நகர்புரமெங்கும்
ஊர்வலம்
செல்ல வழிவகுத்த
சாரதியே...
ஈசனும் நீயே,
ஏனைய இறைவனும்,
நீயே!!!
எழுதும் எழுத்தெல்லாம்,
சமர்பிக்கிறேன்,
என் எழுத்தரிவித்தவனே!!!

கண்ணாடி!!!


அசைவுகளை அற்புதமாய்,
படம் பிடித்து,
நிகழ்வுகளை நிசப்தமாய்,
வெளிக் காட்டி,
என்னை என்முன்னே
நிறுத்தினாய்...
காலையில் மாலையில்
எனை பார்க்க
உனை பார்த்தேன் !!!
என்னிடம் நான் பேச,
உனை நாடி வந்தேன்!!!
காலத்தின் அற்புதமே!!!
உடைக்காமல் உள்செல்லும்
ஒளிப்பிம்பம்,
நீ உடைந்தாலும்,
உடையாமல் உரையாடும்
என் பிம்பம்!!!

வெள்ளி, 28 ஜனவரி, 2011

குடியரசு!!!


ஆண்டுகள் பலவாகியும்
ஏற்றம் கண்டது,
தேசியக்கொடியும்,
அதை ஏற்றுபவனும்.

கூடிநின்று கைதட்டும்
மக்கள் அண்ணார்ந்து
பார்கின்றனர் இன்னும்
ஆகாயத்தையே.

ஏற்றம் இறைப்பவன்
பிள்ளையும்,
விண்ணை தொடும்
ஏற்றம் காணுமா?

நிலாச்சோறு சாப்பிடும்
பிள்ளையும்,
நிலவை தொடுமா?

இயலாதவனுக்கும்,
இல்லாதவனுக்கும்,
இயன்றதை செய்திட
பூக்கட்டும் நல்லரசு.

அன்று முதலே,
அனைவருக்கும்
இனிய
குடியரசு!!!

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நிழல்...

சிரிக்கையில், சிரிக்கிறாய்
நடக்கையில், நடக்கிறாய்.
எக்காலமும் மனமறியாது,
உடனிருக் கிறாய்.
தனிமை போக்கி,
துணிவை தர,
எதிர்வந்து நின்றிடு,
நீ
என் நிழலல்ல,
நிஜம் என்று
உணர்த்திட...

திங்கள், 10 ஜனவரி, 2011

எங்கே இறைவன்...?

குருடனுக்கும் இருள் தெரியும்,
செவிடனுக்கும் நிசப்தம் கேட்கும்,
ஊமை உதடுகளும் மௌனம் பேசும்.

இவைகளில் ஏதும் அறியாமல்
யாதுமாகி நிற்கிறாய்
என் இறைவா....

தெளிவு

எழுத துடிக்கும் கரங்கள்,
அதை தடுக்கும் தெளிவில்லா,
கற்பனை வளங்கள்.
மனக்கேனியில் ஊற்றெடுக்க,
சிறிது சிந்திய, சிதறிய தமிழை,
எழுதிப்பார்த்தேன் குறைகளோடு.
கவிதை களத்தில், நிறைகளை
ஓர்நாள் அறுவடை செய்ய!!!