வெள்ளி, 18 டிசம்பர், 2009

என் செய்வேன் நான்...?

ஆதவன் கரங்களால்,
அல்லியை ஏந்தவா..?
மாதவன் குழல்களால்,
மந்திரம் பாடவா...?
சுந்தரன் நானென,
சூட்சமம் செய்யவா...?
மந்திர புன்னகையால்,
மனதினை திருடவா...?
கொற்றவன் கற்றவன்,
ஏற்றவன் நானே!!!
திண்ணமாய் வண்ணமாய்,
உனை வென்றிடுவேனே...!!!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

புதிர்!!!

அன்றோ என்னுடன்,
நிகழ்வுகளாய்.
இன்றோ என்னுடன்,
நினைவுகளாய்.
நினைவில் மட்டும்,
வாழ்கிறாய் ஏனடி...?
நிஜமோ என்றும்,
கனவோ தானடி...?

பெண்!!!

விடைகள் அறியா,
கேள்விகள் பல,
அதில் பெண்களின்,
உள்ளமோ சில!!!

திங்கள், 30 நவம்பர், 2009

நாம்!!!

நீயாகவே,
நீ வாழ்கிறாய்.
நாமாகவே,
நான் வாழ்கிறேன்...
அறிவாயோ...?
அறிந்தும்,
அறியாமல் இருப்பாயோ...?

ஞாயிறு, 29 நவம்பர், 2009

பனித்துளி, புல்வெளி.

புழுதிக் காட்டில்
பனித்துளி நீ,
தலையில் தாங்கும்
புல்வெளி நான்,
சூரியன் சுடுமென
மறைந்துவிடாதே,
தனிமையில் என்னை
தவிக்கவிடாதே.
விடியலில்,
மறைந்தது பனித்துளி,
விடியலால்,
மறித்தது புல்வெளி...

வெள்ளி, 13 நவம்பர், 2009

One side love...

கனவே,
கண்ணை கிள்ளி செல்லாதே.
நினைவே,
நெஞ்சை நசுக்கி கொள்ளாதே.
விழிகள் எல்லாம்,
உலியாய் மாறி,
சிற்பம் செய்ய துடிக்கிறதே.
பாவம் நெஞ்சம்,
கொஞ்சம் என்று,
கெஞ்ச தானே மறுக்கிறதே...:-)

திங்கள், 9 நவம்பர், 2009

வாழ்க்கை!!!

வாழ்க்கை ஒரு கடலடா ,
நீந்தினால் கரைதொடு,
மூழ்கினால் முத்தெடு.
நீ முடிவெடு,
நீந்துவதா...? அல்லது
மூழ்குவாதா...? என்றல்ல,
முத்துடன் கரை ஏறுவதென்று...

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

மழலைச் செல்வம்

மஞ்சள் வெயிலே,
மாலை கதிரே,
தென்றல் காற்றே,
கவிதை ஊற்றே,
உன் நாவில் இருந்து 
புறப்படும் சொல்லுக்கு,
கம்பனின் கவிதையும்,
ஏனைய காவிஞனின்
ஏடுகளும்,
தோற்று நிற்கும்.
பிறகு நான் என்ன...?
உன் சிரிப்பின் குளுமையில்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
தணிந்து விடுவான்.
பிறகு நான் என்ன...?
என்றும் சிரித்துகொண்டிரு,
என்னை மகிழ்விக்க...!!!

புதன், 23 செப்டம்பர், 2009

வஞ்சப் புகழ்ச்சி...!!!

கருவிழி மேல் மை ஜொலிக்க,
பூங்கையில் வளை ஒலிக்க,
பொன் விரலால் கோலம் இட,
காலை கதிரவன்,
கண் சிமிட்டினான்,
அவள் அழகை கண்டு .
நானோ,
நொடிப்பொழுதும் இமையாமல்
பார்த்து ரசிப்பேன்.
அவள் அழகை அல்ல,
கண் சிமிட்டும் கதிரவனை...!!!

திங்கள், 21 செப்டம்பர், 2009

எது அழகு...?

நடையில்,
உடையில்,
காணும் காட்சியில்,
தெரிவதல்ல அழகு.

அன்பில்,
பண்பில்,
வாழும் மாட்சியில்
வருவதே அழகு...

நான் அழகன்,
நீ....?

சிலை

தலைவனின் கற்சிலை
கண்ணீர் விட்டது,
எதற்காக..?
அந்நியன் ஆட்சியிலோ,
சுதந்திரமாய் சுற்றி திரிந்தேன்.
என்னவன் ஆட்சியிலோ,
சிறைக்குள் அடைப்பட்டு இருக்கிறேன்...
மறைந்தபின் சிலை வைப்பது
இதற்காகவா...?
எனக்கு சிலைகள் வேண்டாம்..
என் நினைவலைகள் போதும்...

படைப்பு...

என் முதல் படைப்பின், கடைசி தருணத்தில்,
ஒரு சிறு நெருடல்,
என் சிந்தனை பிறரை சென்றடையுமா என்று...?

அப்பொழுது,
செங்கதிரின் மின்னொலியில்,
பூங்காற்று என் புத்தகத்தை புரட்டி போட்டது...
என் இமையோரம், ஒரு துளி நீர்...
கருத்துகள் காற்றில் கலந்ததற்காக அல்ல...
அக் காற்றை அனைவரும் சுவாசிக்க போகிறார்கள் என்ற
மகிழ்ச்சி வெள்ளத்தில்,
இனிமையாக...

வெற்றியும், தோல்வியும்...

நீரோடையின் வெற்றி,
அருவியாக வீழ்வதில்.
அருவியின் வெற்றி,
வெள்ளமென எழுவதில்.
நீரை போல் வாழ்வேன்...
வீழ்ந்தாலும் வெற்றி...
எழுந்தாலும் வெற்றி...

பயணம்...!!!

விழித்திரையின்,
உள்ளே புதைந்து விட்ட காட்சிகள்...
விழித்தெழுந்த பின், நினைவில் இருக்கும்,
இனிய நிகழ்வுகளை,
அசைபோடும் காலம் அல்ல இது...
அசைபோடும் தருணத்தில்,
அசைந்தாடும் வெண்ணிலாவை,
தொட்டுவிடும் பருவம் இது...

காற்றை கிழித்து,
கருவலையத்தினுள் நுழையும்
ஒளி கதிர்களை விட,
வேகமான செயல் திறன் கொண்ட,
என் நாட்டு இளங்காலைகளே,
வேகமாய் இலக்கை நோக்கி தனியே செல்லவதல்ல வாழ்க்கை,
நம்முடன் பயனிப்பவர்களையும் அழைத்து செல்வதே...

தமிழ்...!!!

தமிழ்...!!!
பாரதியின் ஏட்டில் இடம் பெறத்தவறிய,
ஒருசில தமிழ் சொற்கள் என் சிந்தனையில் குடியேற துவாங்கியிருக்கும்
காலம் இது...
தமிழ் என்னுள் வாழ்வதை,
தமிழ் மண்ணை எட்ட நின்று,
ரசிக்கும் தருணத்தில் உணர்ந்தேன்...
கருவுற்ற என் கருத்துகளை அடை காத்து, 
படைப்புகளை உருவாக்க முயற்சிக்கும் காலம் இது...
உனக்கேன் இந்த கர்வம் என்று இதை வாசிப்பவர்கள் நினைக்கலாம்,
தமிழின் குரலை ஒலிக்க செய்ய என் நாவிதழ்,
துடிப்பதால் இந்த கர்வம்... 
சங்கம் வளர்த்த, மதுரை பெண்ணின், மனதில் குடியேற,
தமிழின் இனிமையை தூது விட துணிந்துவிட்டேன்,
வெற்றி தோல்வியை எண்ணி கவலை கொள்ளாமல்,
காரணம்,
என் எழுத்துகள் பாரதியின் ஏட்டில் இருந்து எடுத்தவை அல்ல...
என் மனதை துளைத்து வெளியேறியவை......
என் எழுத்துகள் ஏட்டில் இடம்பெற, 
கவிதை புத்தகம் வெளியிட தேவையில்லை,
அறிவியல் தொழில் நுட்பத்தின் அலைவரிசையில்,
தொட்டிலில் விடுகிறேன்...
உறங்க செய்ய அல்ல,
அதன் குரலை கேட்பவரை
விழிக்க செய்ய...
விழித்து கொள்வாயா...?
என்னை வாழவைக்க...
இல்லை விடை பெற்று செல்வாயா..?
என்னை தவிக்க வைக்க...

தமிழ் குழந்தையின்,
மழலைச்சொல் மிகவும் இனிமையானது,
சிரித்தால்...
இனிமையாக இருக்கும்,
அழுதாலும்,
அழகாகத்தான் இருக்கும்...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

விழித் தேடும் விடியல்கள்...!!!

எழு எழு, துயில் எழு,
விடு விடு, துயர் விடு,

சொல்வதை செய்ய, கிளி அல்ல, புலி நீ,
கிளிக் கூண்டில் புலி வாழக் கூடாது...
கூண்டை உடைத்து வெளியேறு,
கூண்டில் அடைப்பவரை, உதைத்தேறு,
பழி பாவம் எண்ணாது...